/tamil-ie/media/media_files/uploads/2019/08/ather.jpg)
Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா பாரத் ஈ.வி. (Ola Bharat EV Fest) விழாவின் ஒரு பகுதியாக ரூ.24,500 வரை தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.
Ola Electric Scooter Discounts Of Up To Rs 24500: ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஆனது ஓலா பாரத் எலக்ட்ரானிக் விழாவின் (Ola Bharat EV Fest), ஒருபகுதியாக அக்டோபர் 16 ஆம் தேதி முதல் எலக்ட்ரானிக் பைக்குகளை தழுவி நாடு தழுவிய கொண்டாட்டத்தை அறிவித்து உள்ளது.
அந்த வகையில் நவராத்திரி, தீபாவளி என விழாக்களுக்கு நாடு தயாராகிவரும் நிலையில் ஓலா மிகப்பெரிய 2W EV எக்ஸ்சேஞ்ச் நிகழ்ச்சிகளில் ஒன்றை நடத்துகிறது.
இதில், லாபகரமான தள்ளுபடிகள், பேட்டரி உத்தரவாதத் திட்டங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அற்புதமான சலுகைகள் உள்ளன.
மேலும், ஓலாவின் பாரத் ஈவி விழாவின் ஒரு பகுதியாக, ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குபவர்கள் ரூ. 24,500 வரை பலன்களை அனுபவிக்க முடியும்.
இதில் 5 ஆண்டு பேட்டரி உத்தரவாதம் (ரூ. 7,000* வரை), எக்ஸ்சேஞ்ச் போனஸ் (ரூ. 10,000 வரை*) ), மற்றும் கட்டண EMI இல்லாத கவர்ச்சிகரமான நிதித் திட்டங்கள் (பார்ட்னர் வங்கிகளிடமிருந்து ரூ. 7,500* வரை தள்ளுபடி) உள்ளிட்ட பல உள்ளன.
பெங்களூருவை சேர்ந்த ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் இ.வி. ஃபெஸ்ட் என்ற பெயரில் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த சிறப்பு விற்பனை அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us