ரைடு-ஹெய்லிங் தளமான ஓலா நிறுவனம் டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் இ-பைக் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இ-பைக் சேவைகளுக்கான கட்டணங்களையும் அறிவித்துள்ளது.
இது குறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இந்த சேவையை பெற 5 கிமீக்கு ரூ. 25 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் 10 கிமீக்கு ரூ. 50 மற்றும் 15 கிமீக்கு ரூ. 75 முதல் என கட்டணம் தொடங்குகிறது.
டெல்லி மட்டுமின்றி பெங்களூருவிலும் இச்சேவையை தொடங்க ஓலா திட்டமிட்டுள்ளது.
ஓலா அடுத்த இரண்டு மாதங்களில் 10,000 மின்சார இரு சக்கர வாகனங்களை மூன்று நகரங்களில் நிலைநிறுத்தவும், ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் அதன் சேவையை படிப்படியாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ஓலா மொபிலிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமந்த் பக்ஷி கூறுகையில், "தற்போது பெங்களூரு, டெல்லி மற்றும் ஹைதராபாத் முழுவதும் இ-பைக் டாக்சிகளுக்கு ஒரு பெரிய சந்தையை உருவாகி உள்ளது" என்றார்.
6செப்டம்பர் 2023 இல், ஓலா பெங்களூரில் இ-பைக் சேவைக்கான பைலட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஓலா அடுத்த 2 மாதங்களில் 10,000 இ-வாகனங்களை இந்த (டெல்லி, ஹைதராபாத் மற்றும் பெங்களூர்) நகரங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஓலா தனது இ-பைக் கடற்படைக்கு சேவை செய்வதற்காக பெங்களூருவில் 200 சார்ஜிங் நிலையங்களையும் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“