/tamil-ie/media/media_files/uploads/2023/01/Ola-S1-S1-Pro-electric-scooters.webp)
தமிழ்நாட்டில் 1500 ஏக்கர் நிலத்தை தன்வயப்படுத்திய ஓலா
பவிஷ் அகர்வாலின் ஓலா நிறுவனம் மாநிலத்தில் சுமார் 1,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் ஒரு தொழிற்சாலைக்கான மிகப்பெரிய ஒப்பந்தமாக இது பார்க்கப்படுகிறது.
இதில் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபடும். மேலும், பேட்டரி செல் உற்பத்தி ஆலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள், ஓலாவின் இணை நிறுவனர் அகர்வால் முன்னிலையில் அடுத்த சில நாள்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டின் அளவு இன்னுமும் அறியப்படாத நிலையில், ஓலா நிறுவனம் அமைக்கும் 'எலக்ட்ரிக் வாகனங்கள்' பூங்காவில் பத்தாண்டுகளின் இறுதிக்குள் ரூ. 1 லட்சம் கோடி முதலீடுகளை எதிர்பார்க்கிறோம் என்று அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியதாக நம்பப்படுகிறது.
இந்த பூங்கா ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தில் செயல்பட்டுவருகிறது. இங்கு கூடுதலாக 1500 ஏக்கர் நிலம் சேர்க்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில், மின்சார கார்கள் மற்றும் பேட்டரிகள் தயாரிப்பதிலும் பார்க்கிறது.
மேலும், ஓலாவின் மின்சார வாகன வணிகத்தின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பேட்டரி ஆலை அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us