/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220904_102058.jpg)
ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க பூக்களின் விலை உயரும் என்று கோவை பூக்கள் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு ஆகிய இடங்களுக்கு கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களில் ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220904_101941.jpg)
இது குறித்து பூ மார்க்கெட் - பூக்கள் வியாபாரிஅபு கூறுகையில் மல்லி முல்லை பூக்கள் 8"ம் தேதி வரை நல்ல விலை இருக்குமென தெரிவித்தனர். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும் எனவும் மேலும் கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யபடும் எனவும் இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம் இந்த வருடம் தான் என தெரிவித்த வியாபாரிகள்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220904_101931.jpg)
வரும் 8"ம்"தேதி வரை விலை உயர்வு இருக்கும் குறிப்பாக கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும். பூக்களில் ரோஜா,அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுமென எனவும்
மல்லி முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும் ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/IMG_20220904_102058.jpg)
அதே சமயம் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய தினம் செண்டுமல்லி 60ரூ, வெள்ளமல்லி 240ரூ, வாடாமல்லி 120ரூ, கலர் செவ்வந்தி 320ரூ, அரளி 200ரூ, ரோஜா 240ரூ, மல்லிகை 1200ரூ க்கும் விற்பனை ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மலர் சந்தையில் மதுரை மல்லிகையின் விலை கிலோ 2300 ஆக எகிறியது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி. ஒரு நாட்கள் இந்த விலையேற்றம் தொடரும் என வியாபாரிகள் கருத்து.
மதுரை மாட்டுத்தாவணி அருகே அமைந்துள்ளது ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகம். இங்கு மதுரை மாவட்டம் மட்டுமன்றி மதுரை அருகே உள்ள திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக மதுரை மல்லி நாளொன்றுக்கு சராசரியாக 50 டன்னுக்கு மேல் இங்கு விற்பனை ஆகிறது. அதுமட்டுமன்றி மத்திய அரசின் புவிசார் குறியீடு அந்தஸ்து பெற்ற மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை உள்ளது. மதுரை விமான நிலையம் மூலமாக நாள் தோறும் மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக மதுரை மல்லிகையின் வரத்து குறைந்துள்ளது. மதுரை மல்லிகை ரூ.2,300, பிச்சி ரூ.700, முல்லை ரூ.800, சம்பங்கி ரூ.150, பட்டன் ரோஸ் ரூ.200, செண்டுமல்லி ரூ.80 என அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.
இது குறித்து மாட்டுத்தாவணி சில்லறை பூ வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் வரத்து மிக குறைவாக உள்ளது. மேலும் தற்போது அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் இருக்கின்ற காரணத்தால் பூக்களின் விலை உயர்வாக உள்ளது இது மேலும் ஒரு சில நாட்கள் நீடிக்கும் என்றார்.
செய்தி : பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.