New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/01/arun-jaitley-.jpg)
Arun Jaitley Death News Live Updates
இந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர்
Arun Jaitley Death News Live Updates
ஏராளமான சமூக ஏற்ற இறக்கம் கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம் இப்போதைக்கு சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
எனினும் தற்போதுள்ள வரி செலுத்தும் அளவு அதிகரிக்கும்போது..., வரி செலுத்தும் கடமையில் நாம் தவறக்கூடாது என்ற எண்ணம் அதிகரிக்கும்போது அடுத்தகட்ட சீர்திருத்தங்களை அமலாக்க, அரசு முன்வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் கொரியா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அவர், தற்போது இந்தியாவில் ஜிஎஸ்டி வரி செலுத்துவதோடு முடிந்துவிடாமல், வரிக் கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட சில அலுவலக நடைமுறைகளையும் செய்ய வேண்டியுள்ளது என்பது உண்மைதான். ஆனால், தற்போது மத்திய அரசின் வருவாய் துறை, இதுகுறித்து சில முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அது நிறைவடையும்போது, இது எளிதாகிவிடும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
17 வெவ்வேறு பெயர்களில் இருந்த வரிகள், 23 பெயர்களில் இருந்த கூடுதல் வரிகள் என அனைத்தும் ஒரே பெயரில் ஜிஎஸ்டி என ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும்போது ஒரே வரிவிகிதத்துக்குள் அடக்கி விட முடியாது. ஒரு சில பொருட்களுக்கு 28 சதவீதம் என, அறிவிக்கப்பட்ட வரி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சொகுசுப் பொருட்களுக்கும் 5 சதவீத வரி என்ற விதிக்க முடியும் எனவும் அவர் வினவினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.