onion price tamil onion price today : வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. பெரிய வெங்காயம் கிலோ 120-க்கும் சின்ன வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெங்காய தட்டுப்பாட்டின் காரணமாகவே விலை உயர்ந்துள்ளதாகவும், விலையைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான அளவு வெங்காயம் கிடைக்கவும், வெளிநாடுகளிலிருந்து 25,000 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, கோயம்பேடு மார்க்கெட், மே 5ம் தேதி மூடப்பட்டது.இதையடுத்து, கோயம்பேடு சந்தையை, மீண்டும் திறக்க வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் வணிகர் சங்கங்கள், தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இதையடுத்து, கோயம்பேடு மொத்த விலை உணவு தானிய விற்பனை அங்காடியை, செப்., 18ம் தேதியும், மொத்த விலை காய்கறி மார்க்கெட்டை, செப்., 28ம் தேதியும் திறக்க, அரசு அனுமதி வழங்கியது.
அடுத்த கட்டமாக, காய்கறி மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட சிறு மொத்த விலை காய்கறி கடை, நவ., 15ம் தேதி இரவு முதல் திறக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளதாக, சிறு மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் காய்கறிகளின் விலை சில்லறை விற்பனையில் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாங்க அப்படியே இன்றைய காய்கறி விலை பட்டியலை பார்க்கலாம்.
தக்காளி - ரூ.25
அவரைக்காய் - ரூ.45
பீன்ஸ் - ரூ.40
பீட்ரூட் - ரூ.45
பாகற்காய் - ரூ.30
கத்தரிக்காய் - ரூ.45
முட்டைகோஸ் - ரூ.20
குடை மிளகாய் - ரூ.40
கேரட் - ரூ.70
காளிபிளவர் - ரூ.25
சவுசவு - ரூ.12
தேங்காய் - ரூ.35
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”