Online food delivery apps UberEats, Zomato, Swiggy foods : நாம் ஸ்விக்கி, ஸ்மொட்டோ, மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற ப்ளாட்ஃபார்மக்ளில் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது நமக்கு காட்டப்படுகின்ற விலைக்கும், அதே உணவினை, அதே ஹோட்டலுக்கு சென்று நாம் சாப்பிடும் போது இருக்கும் விலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளது. இது தொடர்பாக ஆன்லைனில் பல்வேறு தரப்பில் இருந்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப ஒருத்தரின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளது ஸ்விக்கி.
ஹேம்நாத் என்ற நபர் பதிவிட்டிருக்கும் ட்வீட்டில்
Ah..yes, the restaurant raises the bill!….
But, they add the commission DEMANDED by you into their bill.
So a normal restaurant order of Rs.100 will be:
100+25= 125 – order
20 – Restaurant charges
25 – delivery charges
Bill = 170
If discount (50%):
=188-63 = 125
Bill = 170
ரெஸ்டாரெண்டில் ஸ்விக்கி கூறும் விலையில் தான் பில்கள் தரப்படுகிறது. ஒரு சாதாரண உணவகத்தில் ஒரு சாப்பாட்டின் விலை ரூ. 100 என வைத்துக் கொண்டால், 25 ரூபாய் ஆர்டருக்காகவும், 20 ரூபாய் ரெஸ்டாரெண்டுக்காகவும், மேலும் 25 ரூபாய் டெலிவரி சார்ஜ் என்றும் பில் வருகிஆது. 50 % டிஸ்கௌண்ட் என்றாலும் 125 ரூபாய் தான் விலை வர வேண்டும். ஆனாலும் பில் தொகை ரூ. 170 என்று குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறியிருந்தார்.
தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை?
இதற்கு பதில் அளித்த ஸ்விக்கி நிறுவனம் உங்களின் பாய்ண்ட் ஆஃப் வியூவை நாங்கள் புரிந்து கொள்கின்றோம். ஆனால் இன்வாய்ஸ் பொறுத்த வரையில் நாங்கள் யாரையும் டிமாண் செய்வதில்லை. பில்களில் வரும் கட்டணங்கள் யாவும் ஹோட்டலை நிர்வகிப்பவர்களே நிர்ணயம் செய்கின்றார்கள். நாங்கள் முடிந்தவரை எங்களுடைய வேலை முறைகள் மற்றும் கட்டணங்களில் ஒளிவு மறைவின்றி செயல்பட்டு வருகின்றோம் என்று கூறுகிறது.
சில வாடிக்கையாளர்கள் “உணவகங்களில் இருந்து ஸ்விக்கி கமிஷனாக 25% பணத்தை பெற்றுக்கொள்கிறது. மேலும் உணவின் விலையை 20 முதல் 25% வரை அதிகரித்து விற்பனை செய்கிறது என்றும் கூறியுள்ளது” என புகார் அளித்து வருகின்றனர். இதே நேரத்தில் ஸோமாட்டோ நிறுவனம் சமீபத்தில் ஊபர் ஈட்ஸ் இந்தியாவின் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊபர் ஈட்ஸ் சென்றால் ஆட்டோமேட்டிக்காக அது ஸோமாட்டோவிற்கு செல்ல வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறது.