Advertisment

ஆன்லைனில் கடன் வழங்கும் தளங்களில் முதலீடு செய்வது லாபம் தருமா?

இந்தியாவின் ‘Tech Capital’ பெங்களூரு, அதிக கடன் வழங்குபவர்களின் பட்டியலில் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களும் முன்னணியில் உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
loan

வங்கி கடன் வழங்காத பட்சத்தில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவை எனில் சில வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) உங்களுக்கு உதவக்கூடும். புதிய வகை டிஜிட்டல் தளங்கள் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளில் சிறந்த வருவாயைப் பெறுவதற்கு உதவுகின்றன. சிக்கலான வங்கி விதிகள் கிடையாது. ஸ்மார்ட்போன்கள் அல்லது கணினிகள் போதுமானது. ஆன்லைன் மூலம் கடன் மற்றும் பியர் டு பியர் சந்தைகள் பெருகிவிட்டது. இணையதளத்தின் மூலமாக தனிநபர்களிடம் கடன் வாங்குவதுதான் பி2பி. இதற்காக உள்ள இணைய தளங்களில் பதிவு செய்ய வேண்டும். லென்டென்க்ளப், SaveIN போன்ற எண்ணற்ற கடன் வழங்கும் தளங்கள் உள்ளன.

Advertisment

லென்டென் கிளப் என்பது தனிப்பட்ட கடன்களுக்கான கடன் வழங்கும் தளத்தை நம்புவதற்கான ஒரு நம்பகமான பியர் ஆகும், அங்கு கடன் வாங்குபவர்களுக்கு எளிதான மற்றும் தொந்தரவில்லாத ஆன்லைன் கடன்களுக்கான அணுகல் கிடைக்கும். SaveIn என்பது இந்தியாவின் முதல் மற்றும் ஒரே சமூக நிதி தளம். இது உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், வணிக கூட்டாளர்கள் மற்றும் பிற நம்பகமான தொடர்புகள் மத்தியில் கடன் வாங்க உதவுகிறது.

லென்டென் கிளப் சுமார் 6.5 லட்சம் முதலீட்டாளர்களின் பதிவு செய்யப்பட்ட தளத்தைக் கொண்டுள்ளது. SaveIn செயலியை கூட சுமார் 50,000 பதிவிறக்கம் செய்துள்ளனர். இதில் 70 சதவீத பயனர்கள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யவதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு டிஜிட்டல் பதிவுகளை வைத்திருக்க விரும்புகிறார்கள்.

லென்டென் கிளப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவை சேர்ந்த இளம் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் முந்தைய தலைமுறையினரை விட கடன் வாங்கும்போதும் அல்லது கடன் வழங்குபவர்களாகப் பயன்படுத்தும்போது மிகவும் முன்னணியில் உள்ளனர் என்று கண்டறிந்துள்ளது. 21-30 வயதுக்குட்பட்ட முதலீட்டாளர்கள் லென்டென் கிளப்பில் கடன் வழங்குநர்களாக (54%) மிகவும் சுறுசுறுப்பாக உள்ளனர்.

இந்தியாவின் ‘Tech Capital’ பெங்களூரு, அதிக கடன் வழங்குபவர்களின் பட்டியலில் முதலிடத்திலும், அதனை தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், புனே மற்றும் சென்னை ஆகிய நகரங்களும் முன்னணியில் உள்ளன. அதிக கடன் தேவை உள்ளவர்களில் அதிக எண்ணிக்கையிலான மக்களும் பெங்களூரிலிருந்து வந்தவர்கள். முதலீட்டாளர்களாக CXOsக்கள் முதல் நடுத்தர நிர்வாக நிலைகள் வரையிலான சம்பள வல்லுநர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதாக அறிக்கை கூறியுள்ளது. மேலும், சராசரி முதலீட்டுத் தொகை ரூ .1.81 லட்சமாகவும், கடன் வழங்குபவர்களிடையே ரூ.50,000 முதல் 1 லட்சம் வரை அதிக விருப்பமான தொகையாகவும் இருக்கிறது

கொரோனா தொற்று ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் முறையை துரிதப்படுத்தியுள்ளது என்றும் கடன் வழங்கும் துறையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும் லென்டென் கிளப்பின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவின் படேல் தெரிவித்துள்ளார். உலகளாவிய சுகாதார நெருக்கடியின் போது, ​​முதலீட்டாளர்கள் பி 2 பி கடன் வழங்குவதில் முதலீடு செய்து லாபகரமான வருமானத்தை பெற்றுள்ளனர்.

SaveIN நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜிதின் பாசின் கூறுகையில், ஸ்மார்ட்போன்கள் மூலம் டிஜிட்டல் முறையில் செயல்படும் வர்த்தகம் என்பதால் தொழிலாளர் வர்க்கத்திற்கு அதிக பங்களிப்பு செய்கிறது என்றார்.

ஆன்லைனில் கடன் கொடுப்பது பாதுகாப்பானதா?

“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், பியர்-டு-பியர் கடன் வழங்கும் தளங்கள் வருமானத்தை உத்தரவாதம் செய்ய முடியாது. இது மியூச்சுவல் ஃபண்ட், எஃப்.டி மற்றும் டிபென்ச்சர்ஸ் போன்ற பிற முதலீட்டு கருவிகளைப் போலவே முதலீட்டு அபாயத்தையும் கொண்டுள்ளது. எனினும் குறைவான தொகையை கடன் வழங்கும்போது அது ஆபத்தை குறைக்கிறது. இது போர்ட்ஃபோலியோ வருமானத்தை பாதிக்காது, ”என்று லென்டென் கிளப் கூறியுள்ளது.

தொற்றுநோய்களின் போது, ​​மக்கள் அவசர மற்றும் திட்டமிடப்படாத செலவுகளுக்காக ஒருவருக்கொருவர் கடன் வாங்கியபோது SaveIn டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வளர்ச்சியை கண்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் காணப்பட்ட வருமானத்தின் அடிப்படையில், ஒரு முதலீட்டாளர் சராசரியாக நிகர வருவாயை 13 சதவீதமாக எதிர்பார்க்கலாம் என்று லென்டென் கிளப் தெரிவித்துள்ளது.

ஒரு முதலீட்டாளர் 12% - 15% p.a. நிகர வருமானம் பெற நினைத்தாலும் முதலீட்டாளர்களை பொறுத்து மாறுபடும். ஒரு பியர் டு பியர் கடன் வழங்கும் தளத்தில் முதலீடு செய்வதற்கான திறவுகோல் பல்வகைப்படுத்தல் ஆகும். கடன் வாங்குபவருக்கு சிறிய டிக்கெட் கடன்களை (பொதுவாக ரூ .500) வழங்குதல் போன்றது. இதில் ஆபத்து உள்ளதால், அதிக கடன் விகிதங்கள் சராசரியாக 12-15% p.a ஆக இருக்கும் என லென்டன் கிளப் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Loan Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment