gold | இந்தியாவில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது, தங்கம் கொடுப்பதும் வாங்குவதும் வழக்கம். பெண்கள் பரம்பரை பரம்பரையாக தங்கத்தை செல்வமாக கருதுகின்றனர்.
தலைமுறை தலைமுறையாக தங்கத்தின் பாதுகாத்து வருகின்றனர். விரலில் மோதிரம், கழுத்தில் நெக்லஸ் என தங்கத்தின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள குடும்பங்கள் தங்கத்தை பெருமளவு பெருக்கி வைத்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, உலக தங்க கவுன்சில் இந்தியாவின் இயக்குனர் சோமசுந்தரம், “2020–21ம் ஆண்டுக்கான ஆய்வில் இந்திய குடும்பங்கள் 2–13,000 டன் தங்கம் வைத்துள்ளது தெரியவருகிறது.
2023 ஆம் ஆண்டளவில், இது 25 மில்லியன் கிலோகிராம்கள் அல்லது தோராயமாக 24-25,000 டன்கள் அளவுக்கு வளர்ந்து உள்ளது. இந்த அளவு தங்கத்தின் மூலம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40% ஈடு செய்யப்படுகிறது” என்றார்.
ஆக்ஸ்போர்டு கோல்டு குரூப் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலக அளவில் உள்ள தங்கத்தில் 11% மட்டுமே இந்திய குடும்பத்தினரிடம் உள்ளது. தோராயமாக 25000 டன்கள் (அல்லது 22679618 கிலோ) தங்கம் இந்திய வீடுகளுக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் IMF ஆகிய நாடுகளை விட அதிக தங்கம் கையிருப்பில் உள்ளது.
பொருளாதாரம் மற்றும் சந்தை அறிக்கையின்படி, அமெரிக்காவில் 8133.5 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு உள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் 75% தங்கம். 3359.1 மெட்ரிக் டன் தங்கத்துடன் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஜெர்மனியர்கள் சமீபகாலமாக தங்கத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக ஆக்ஸ்போர்டு கூறுகிறது. உலகளவில் தங்கம் வாங்கும் நாடுகளின் பட்டியலில் ஜெர்மனி முதலிடத்தில் உள்ளது. இத்தாலியில் 2451.8 மெட்ரிக் டன் தங்கம் உள்ளது, இது உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“