scorecardresearch

மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம்: போஸ்ட் ஆபிஸ் ப்ரான்சைஸ் பெறுவது எப்படி?

போஸ்ட் ஆபிஸ் ஃப்ரான்சைஸ் உரிமம் பெற்று மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

Open the post office franchise earn up to 50000 rupees every month
போஸ்ட் ஆபிஸ் ஃப்ரான்சைஸ் பெற 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி அவசியம்.

போஸ்ட் ஆபிஸ் கடிதங்களை ஒருவரின் முகவரிக்கு அனுப்பும் பணியை மட்டும் செய்வதில்லை, மாறாக அது மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையது.
மேலும், தபால் அலுவலகம் மக்களின் சேமிப்பை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு முதலீட்டு வாய்ப்புகளையும் வழங்குகிறது. கூடவே லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இதற்கு அதிக மூலதனமோ அல்லது பட்டப்படிப்பு-டிப்ளமோ எதுவும் தேவையில்லை. எட்டாவது தேர்ச்சி மட்டுமே பெற்றவர் கூட தபால் நிலையத்தை வருமான ஆதாரமாக மாற்ற முடியும்.
அந்த வகையில், போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் எடுப்பதன் மூலம் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ் யாரெல்லாம் எடுக்கலாம்?

இந்த உரிமையைப் பெறும் இந்திய குடிமகனின் வயது 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். மேலும், உரிமையைப் பெற விரும்பும் நபர் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தபால் அலுவலக உரிமையை எடுத்த பிறகு, நீங்கள் கமிஷன் மூலம் சம்பாதிக்கலாம். இதன் மூலம் ஸ்பீட் போஸ்ட் புக்கிங், மணி ஆர்டர்கள், பதிவேடு, தபால் தலைகள், தபால் எழுதுபொருள்கள் மற்றும் மணி ஆர்டர் படிவங்கள் உள்ளிட்ட சேவைகளை தொடரலாம்.

போஸ்ட் ஆபீஸ் ஃபிரான்சைஸ்

தபால் அலுவலகத்தில் இரண்டு வகையான உரிமைகள் உள்ளன. ஒன்று அவுட்லெட் ஃபிரான்சைஸ், மற்றொன்று போஸ்டல் ஏஜென்ட் ஃப்ரான்சைஸ்.
இந்த இரண்டு உரிமையாளர்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுக்கலாம். தொடர்ந்து, அஞ்சல் அலுவலகத்தில் இதற்கான முழு விவரங்களும் கிடைக்கும். அஞ்சல் அலுவலக ஆன்லைன் போர்டலிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்தப் போஸ்ட் ஆபிஸ் ஃப்ரான்சைஸ் வழியாக மாதம் ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Open the post office franchise earn up to 50000 rupees every month