Advertisment

Pan-Aadhaar Card Linking Last Date: பான் - ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா? விரைவில் கெடு முடியப் போகுது!

pan aadhaar linking last date extended: திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pan-Aadhaar Card Linking Deadline Last Date - ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா? டைம் முடியப் போகுது!

Pan-Aadhaar Card Linking Deadline Last Date - ஆதார் எண்ணை லிங்க் பண்ணிட்டீங்களா? டைம் முடியப் போகுது!

 Pan-Aadhaar Linking: பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 31 வரை நீட்டித்த உத்தரவை மறந்துவிட வேண்டாம்.

முன்னதாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்தது. பிறகு, டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.

இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது. ஆனாலும், சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மக்கள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால தாமதம் செய்து வந்தனர். இந்நிலையில், டிசம்பர் 31க்குள் ஆதார் - பான் எண்ணுக்குள் இணைத்துவிட வேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.

 aadhaar card pan card online : இணைப்பது எப்படி?

1. //www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்.

2. Link Aadhaar என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.

3. திரையில் தோன்றும் பக்கத்தில், பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) ஆகியவற்றை டைப் செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்க I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.

6. Capcha எனப்படும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து Link Aadhaar பட்டனை கிளிக் செய்யவும்.

Pan Card Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment