ஆதார் - பான் கார்ட் இணைப்புக்கு டிச.31-ம் தேதி தான் இறுதி நாள்!
Aadhaar-Pan Card Link Deadline : இதனை நீங்கள் செய்த பிறகு உங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து தரவுகளும் சரியாக உள்ளதா என்பதை வருமான வரித்துறை சரி செய்யும்.
Linking Aadhaar-PAN card online : மத்திய நேரடி வரி வாரியம செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதார் தகவல்களுடன் பான் கார்ட் தகவல்களை இணைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. பிறகு அதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பான் அட்டை தகவல்களை இணைக்காமல் விட்டால் வருமான வரியை திரும்ப செலுத்துவதில் பிரச்சனை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
ஆன்லைனில் ஆதார் மற்றும் பான் கார்ட் தகவல்களை இணைப்பது எப்படி?
ஆன்லைனில் ஆதார் மற்றும் பான் கார்ட் தகவல்களை இணைப்பது மிகவும் சுலபம். நீங்கள் முதலில் வருமான வரித்துறையின் இணையத்திற்கு சென்று குயிக் லிங்க்ஸ் என்ற பக்கத்தில் இருக்கும் லிங்க் ஆதார் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அதை க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு ஒரு பேஜ் ஒப்பன் ஆகும். அதில் பான் கார்ட் மற்றும் ஆதார் அடையாள அட்டை தகவல்களை கேட்கும். அதனை நீங்கள் சப்மிட் செய்தால் போதும்.
எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பது எப்படி ?
(UIDPAN) இடைவெளி (உங்களின் 12 இலக்க ஆதார் எண்) இடைவெளி (10 இலக்க பான் அட்டை எண்) ஆகியவற்றை டைப் செய்து 67678 அல்லது 56161 என்ற எண்களுக்கு, உங்களின் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் இருந்து அனுப்பவும். இதனை நீங்கள் செய்த பிறகு உங்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற அனைத்து தரவுகளும் சரியாக உள்ளதா என்பதை வருமான வரித்துறை சரி செய்யும்.
உங்களின் ஆதார் அட்டையுடன் பான்கார்ட் தகவல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி அறிந்து கொள்வது?
ஆதார் அட்டையுடன் பான் கார்ட் தகவல்களை இணைத்துவிட்ட பிறகு, ப்ரொசசஸ் முழுமையாக நடைபெற்றதா என்பதை அறிந்து கொள்ள நீங்கள் முதலில் வருமான வரி இணையத்திற்கு செல்லுங்கள். அதில் லிங்க் ஆதார் பட்டனை க்ளிக் செய்து உங்களின் ஆதார் அல்லது பான் கார்ட் எண்ணை உள்ளீடாக செலுத்தினால் உங்கள் ப்ரோசசஸின் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்ளலாம்.