Linking Aadhaar-PAN card: உங்களுடைய நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) அட்டை அல்லது பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கவில்லையா ! ரூபாய் 10,000/- வரையிலான அபராதத்தை அது உங்களுக்கு கொண்டு வரலாம். அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31, 2020 என்று நிர்ணயித்துள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் இதை செய்ய தவறினால் அது உங்களுக்கு அபராதத்தை விளைவிக்கும். உங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் அது செயல்படாது என ஏற்கனவே வருமான வரித்துறை அறிவித்துவிட்டது. ஆதாருடன் இணைக்காதவர்களுடைய நிரந்தர கணக்கு எண் குறிப்பிட்ட தேதி முடிந்தவுடன் உடனடியாக செயல்படாமல் போகும். எனவே பான் எண்ணை நிரப்புவதற்கு, தெரிவிப்பதற்கு அல்லது மேற்கொள் காட்ட முடியாது என நிதி அமைச்சகத்தின் ஒரு அறிவிப்பு கூறுகிறது.
வீடு வாங்கும் ஐடியாவில் இருக்கீங்களா? அப்படியே எல்ஐசி பக்கம் கொஞ்சம் வாங்க
பான் அட்டை செயல்படாமல் போனால், ஒரு தனி நபரால் வங்கி கணக்கு திறக்க முடியாது, ஒரு சொத்தை விற்கவோ வாங்கவோ முடியாது மேலும் பான் எண் இல்லாமல் முதலீடு செய்ய கூட முடியாது என ClearTax அமைப்பின், நிறுவனர் மற்றும் CEO வான Archit Gupta கூறுகிறார். செயல்படாத பான் அட்டையை வைத்திருப்பது பான் அட்டையே இல்லாமல் இருப்பதற்கு சமம். மேலும் நிதி பரிவர்த்தனைகள் செய்ய கூட விடாமல் நீங்கள் தடுக்கப்படலாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.
எஸ்.பி.ஐ-யின் இமாலய சாதனை... பிரமிப்பு தான்!
இந்த இரண்டு ஆவணங்களையும் இணைப்பதற்கு பல தடவை அரசு காலகெடுவை நீடித்தது. கடந்த ஆண்டு மார்ச் 31 அன்றே இதற்கான காலக்கெடு முடிவடைந்தது. ஆனால் அந்த கெடு செப்டம்பர் 30 வரை மீண்டும் நீடிக்கப்பட்டது. மூன்றாவது தடவையாக டிசம்பர் 31 என்று அந்த காலக்கெடு நீடிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி மார்ச் 31, 2020 தான் இதற்கான கடைசி தேதி.
ஆதாருடன் பான் எண்ணை இணைக்க தெரியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று தேவையான தகவல்களை நிரப்பி இணைத்துக் கொள்ளுங்கள். https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”