Advertisment

அதிக இபிஎஸ் ஓய்வூதியம் பெற வேண்டுமா; இந்தத் தேதியை மறக்காதீங்க

வருமான வரிச் சட்டம், 1961 ('சட்டம்') விதிகளின் கீழ், 1 ஜூலை 2017 இன் படி பான், ஆதார் எண்ணைப் ஒவ்வொரு நபரும், இணைக்க வேண்டும்.

author-image
WebDesk
New Update
What ensues if the interest remains un-updated in the EPFO passbook

பாஸ்புக்கை EPFO உறுப்பினர்களின் இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் வழியாக அணுகலாம்.

ஜூன் மாதத்தில் வரும் சில முக்கியமான நிதி தொடர்பான காலக்கெடுக்களை பார்க்கலாம்.

Advertisment

பான்-ஆதார் இணைக்கும் காலக்கெடு

பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. வரி செலுத்துவோருக்கு மேலும் சிறிது கால அவகாசம் வழங்குவதற்காக, பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான தேதி 2023 ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

இதன் மூலம் நபர்கள் தங்கள் ஆதாரை ஆதார்-பான் இணைப்பிற்கான பரிந்துரைக்கப்பட்ட அதிகாரத்திற்கு விளைவுகளை எதிர்கொள்ளாமல் தெரிவிக்கலாம்" என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961 ('சட்டம்') விதிகளின் கீழ், 1 ஜூலை 2017 இன் படி பான், ஆதார் எண்ணைப் ஒவ்வொரு நபரும், இணைக்க வேண்டும்.

அதிக இபிஎஸ் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு

EPFO இரண்டாவது முறையாக EPS-ல் இருந்து அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் தேதியிலிருந்து (நவம்பர் 4, 2022) மார்ச் 3, 2023 வரை நான்கு மாத கால அவகாசத்தை விதித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை EPFO செயல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 26, 2023 வரை EPFO நீட்டித்துள்ளது.

மிக சமீபத்திய காலக்கெடு நீட்டிப்பு தகுதியான ஊழியர்களுக்கு EPS இல் இருந்து அதிக ஓய்வூதியத்தை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்க அதிக காலத்தை வழங்குகிறது. பல ஊழியர்கள் ஓய்வூதியம் அதிகரிப்பதற்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்தச் மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை மூன்று மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது.

எனவே, ஆதார் முகவரியை இலவசமாகப் புதுப்பிக்க விரும்பும் ஆதார் வைத்திருப்பவர்கள் ஜூன் 14, 2023க்கு முன் அதைச் செய்ய வேண்டும். இந்தச் சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே இலவசம் ஆகும். ஆதார் மையங்களில் ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும்.

வங்கி லாக்கர் ஒப்பந்த காலக்கெடு

டிசம்பர் 31, 2023க்குள் லாக்கர் ஒப்பந்தங்களை படிப்படியாகப் புதுப்பிப்பதை வங்கிகள் முடிப்பதற்கான காலக்கெடுவை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நீட்டித்துள்ளது.

இந்தியன் வங்கியின் சிறப்பு FD

இந்தியன் வங்கி "IND SUPER 400 DAYS" சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை ஜூன் 30, 2023 வரை நீட்டித்துள்ளது. இந்தியன் வங்கி இப்போது பொது மக்களுக்கு 7.25% வட்டி விகிதங்களையும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75% மற்றும் சிறப்பு மூத்த குடிமக்களுக்கு 8.00% வட்டி விகிதங்களையும் வழங்குகிறது.

எஸ்பிஐ அம்ரித் கலாஷ்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜூன் 30, 2023 முதலீட்டு காலக்கெடுவுடன் 400 நாள் டெனர் திட்டத்துடன் "அமிர்த் கலாஷ்" சில்லறை கால வைப்புத்தொகையை மீண்டும் அறிமுகப்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Eps Pan Card Aadhaar Card Sbi Fixed Deposit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment