PAN aadhaar linking news 17 crore pan cards will turn useless : பான் அட்டை மற்றும் ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடுவை வருமான வரித்துறை கடந்த 8 முறை நீட்டித்த பிறகும், சுமார் 17 கோடி பான் அட்டை பயனாளர்கள் இரண்டு ஆவணங்களையும் இதுவரை இணைக்கவில்லை. நிதி மசோதாவில் (Finance Bill) 2019, திருத்தம் கொண்டு வந்தப்பிறகு, வருமான வரித்துறைக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத அனைத்து பான் அட்டைகளையும் செயல்படாததாக அறிவிக்க அதிகாரம் உள்ளது.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
ஒரு நபர் தனது ஆதார் எண்ணை தெரிவிக்க மறுத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பான் எண்ணை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு விதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி செயல்படாததாக அறிவிக்க முடியும், என்று வருமான வரி சட்டத்தின் (Income Tax act) உட்கூறு 41 பிரிவு 139AA கூறுகிறது. செப்டம்பர் 1, 2019 முதல் இந்த சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத இதுபோன்ற செயல்படாத பான் அட்டைகள் பயனற்றதாக மாறிவிடும் என்பது வெளிப்படையான ஒன்று.
ஒட்டுமொத்தமாக 30.75 கோடி பான் அட்டைகள் ஜனவரி வரை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 17.58 கோடி பான் அட்டை பயனாளர்கள் வழிகாடுதல்களை இன்னும் பின்பற்றவில்லை என்றும், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் பராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறையால் வழங்கப்பட்டுள்ள பத்து இலக்கம் கொண்ட எண்- எழுத்துக்களால் ஆன பான் எண்ணை 12 இலக்க அடையாள எண்ணான ஆதாருடன் இணைக்க விதிக்கப்பட்டுள்ள காலக்கெடு 31 டிசம்பர் 2019ல் இருந்து 31 மார்ச் 2020 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்டுள்ள இந்த காலக்கெடு என்பது, தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காத பான் அட்டைதாரர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், ஏனேன்றால் அவர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் தாகூர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 48 கோடி பான் அட்டைதாரர்கள் உள்ளனர். அதே நேரம் 120 கோடி இந்தியர்கள் ஆதார் அட்டை வைத்துள்ளனர். ஆதார் அட்டையை பான் அட்டையுடன் இணைக்காமல், ஆதார் அட்டையை பான் அட்டை பயன்படுத்த வேண்டிய இடத்தில் நீங்கள் பயன்படுத்தினால், வருமான வரித்துறை உங்களுக்கு புதிய பான் அட்டையை தரக்கூடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.