Pan card Aadhaar Linking deadline : மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் மற்றும் இதர தேவைகளுக்காக வங்கிக் கணக்கு துவங்கும் நபர்களாக நீங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த செய்தி உங்களுக்காக தான். ஆதார் அடையாள அட்டை நம்முடைய அனைத்து விதமான அரசு சார் சேவைகளை பெற மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.
ஆதார் அடையாள அட்டையை பான் அட்டைகளுடன் இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த பணிகளுக்கான காலக்கெடு தொடர்ச்சியாக நீட்டிக்கபப்ட்டு வந்த நிலையில் தற்போது இறுதி காலக்கெடுவை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதன்படி ஒருவர் தன்னுடைய பான் அட்டையை ஆதார் அடையாள அட்டையுடன் மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் பான் அட்டையை இணைக்கவில்லை என்றால் ரூ. 1000 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் முடக்கப்பட்ட பான் அட்டையை ஒருவர் பயன்படுத்த முயற்சி செய்தால் அவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட இந்த காலகட்டத்திற்குள் பான் அட்டையை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் தேவையற்ற அபாரதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். ஒருவேளை உங்களுக்கு ஆதாருடன் பான் அட்டையை எப்படி இணைப்பது என்று தெரியவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்ட முறைகளை பின்பற்றி இணைக்கவும்.
tax e-filing -ன் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு முதலில் செல்லவும்
உங்களின் லாக்-இன் தகவல்களை உள்ளீடாக கொடுத்து இணையத்திற்குள் செல்லவும்.
பெயர், பாஸ்வேர்ட், பிறந்த தேதி ஆகியவை முக்கியமாகும்.
ஆதார் அடையாள அட்டையுடன் பான் கார்டை இணைக்கவும் என்ற பாப் அப் முதலில் தோன்றும். ஒருவேளை அது தோன்றவில்லை என்றால் ஃப்ரோபைல் செட்டிங்கில் சென்று லிங் ஆதாரை தேர்வு செய்யவும்.
உங்களின் தரவுகள் தானாகவே அப்டேட் ஆகியுள்ள அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
அங்கே அனைத்து தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துவிட்டு பிறகு ஆதார் அடையாள அட்டை எண்ணை உள்ளீடாக தந்து லிங்க் ஆதார் பட்டனை க்ளிக் செய்யவும்.
ஆதார் அடையாள அட்டையுடன் பான் தகவல்கள் இணைக்கப்பட்டதை உறுதி செய்யும் குறுஞ்செய்தி உங்களின் மொபைலுக்கு வரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil