Advertisment

வெறும் ரூ. 50 போதும்! தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்

தொலைந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பான் கார்டில் தவறு இருந்தாலோ,பான் கார்டு தெரியாமல் கிழிந்தாலோ ? என்ன செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pan card apply online charges

pan card apply online charges : நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று.வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

Advertisment

பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தொலைந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பான் கார்டில் தவறு இருந்தாலோ,பான் கார்டு தெரியாமல் கிழிந்தாலோ ? என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த தகவல்

pan card apply online charges : முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து பிறருக்கும் அறிய செய்யுங்கள்.

இணையவழியில் புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. தபால் வாயிலாக எந்த ஆவணங்களையும் சமர்பிக்க தேவையில்லை. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக இணையவழியில் செய்யலாம். இதன் மூலம் பான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.

தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக பான்கார்டில் மாற்றம் தேவைப்படும். //www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html இணையதளத்திற்கு சென்று ‘Application type’ என்ற மெனுவை கிளிக் செய்து ‘ Changes or correction in existing PAN data/ Reprint of PAN Card( No changes in existing PAN data) தேர்வு செய்யவும். பின்னர் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, Captcha வை உள்ளீடு செய்து ‘ Submit’ ஐ கிளிக் செய்யவும்.

உங்கள் ஆதார் தகவல்களை இனிமே யாராலும் திருட முடியாது! நீங்களே பாதுகாக்க புதிய வழி வந்தாச்சி

இப்போது உங்கள் பான் கார்டு திரையில் தோன்றும். நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை வெறும் ரூ. 50 மட்டுமே.

Pan Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment