முக்கிய ஆவணமான பான் கார்டு.. சோஷியல் மீடியாவில் பகிர்ந்தால் இவ்வளவு ஆபத்துக்கள் வரும்!

பான் கார்டு விவரத்தை கொண்டு அவரின் மொத்த விவரத்தையும் எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.

pan card apply : நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று.வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.

பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

1. பான் கார்ட் வைத்திருக்கும் ஒருவர், இ-பான் கார்ட் பெற முடியாது.

2. தனி நபர் மட்டுமே இந்த இ-பான் கார்டை பெற முடியும். குடும்பங்களோ, நிறுவனங்களோ பெற முடியாது.ஆதார் அட்டையோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும். ஓடிபி மூலம் ஆதாரம் உறுதி செய்யப்படும்.

‘Traffic’ ஷகுர் பானு : இரவில் மருத்துவமனை பனி… பகலில் போக்குவரத்தை சீர் செய்தல்.

3. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை உறுதி செய்ய uidai.gov.in என்ற இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள் ஆதாரின் இ- கே.ஒய்.சி உறுதி செய்யப்பட்டபின், இ – பான் கார்டை பெற முடியும்.

4. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களைப் பொருத்தே இ – பான் கார்ட் கொடுக்கப்படும்.
பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற தகவல்களில் பிழை இருந்தால்,uidai.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று திருத்திக் கொள்ளுங்கள்.

5. இ-பான் கார்டை பெற விண்ணப்பதாரரின் கையொப்பம் வெள்ளை காகிதத்தில் இடப்பட்டு, ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும். 200 டி.பி.ஐ, அதிகபட்சம் 10 கே.பி அளவு கொண்ட படமாக இருக்க வேண்டும்.

ரயில் பயணத்தின் போது விபத்து.. உங்களால் 10 லட்சம் வரை இன்சூரன்ஸ் பெற முடியும் தெரியுமா?

இப்படி பான் கார்டு வாங்கவும் சரி, பான் கார்டு தொலைந்தாலும் சரி நீங்கள் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். அலைச்சலும் கூட. அப்படிப்பட்ட முக்கிய ஆவணமான பான் கார்டை நீங்கள் பாதுகாக்க வேண்டியது உங்களது கடமை. அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது மிகவும் ஆபத்தாகும்.

*உங்கள் பான் கார்டு நம்பர் மற்றவர்களுக்கு தெரிந்தால் நூதன் மோசடிகள் பலவற்றிலும் உங்களது பான் கார்ட்டை பயன்படுத்த வாய்ப்புண்டு.

*உங்களின் பான் கார்டு, ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால் அதனை உடனே செய்து விடுங்கள். இல்லையெனில் அதைக் கொண்டு சிலர் ஏமாற்று வழிகளில் ஈடுபடலாம்.

*ஒருவரின் பான் கார்டு விவரத்தை கொண்டு அவரின் மொத்த விவரத்தையும் எளிதாக தெரிந்துக் கொள்ள முடியும்.

*வருமான வரித்துறையினர் பான் கார்டு குறித்து தொடர்ந்து கவனித்து வருவார்கள். எனவே உங்கள் பான் கார்டை பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது உங்களின் கடைமையாகும். தேவையற்ற இடங்களின் பான் கார்டை பகிர வேண்டாம் என வருமான வரித்துறையினரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close