அண்மையில் தனியார் கடன் வழங்கும் நிறுவனமான இந்தியா புல்ஸ் அதன் fintech தளமான Dhani மூலம் எந்தவொரு பிணையமும் இல்லாமல் தனிநபர்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் சமூக வலைதளத்தில் ஏழுந்துள்ளது.
இந்நிறுவனத்தில் கடன் பெற Dhani செயலியில் பான் மற்றும் ஆதார் கார்டு விவரங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், சில மோசடி கும்பல் பிற நபர்களின் பான் கார்டுகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி கடன்களை பெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடன் பெறும் நபர்கள் EMI-களை திருப்பிச் செலுத்துவதில்லை. இது, பான் கார்டு உரிமையாளரின் சிபில் ஸ்கோரை பாதிக்கும். எனவே, உங்கள் பான் கார்டில் ஏதெனும் மோசடி நடைபெற்றுள்ளதா என்பதை எளிதாக கண்டறியலாம். அப்படியிருக்கும் பட்சத்தில், உங்கள் விவரங்களை தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றி தானி செயலி அல்லது இந்தியாபுல்ஸுக்கு புகாரளிக்கலாம். பெரும்பாலும் கடன் வாங்கியவர்களின் முகவரி பீகார், உத்தரப்பிரதேசம் என இருந்துள்ளது.
உங்கள் பான் கார்டில் கடன் வாங்கப்பட்டுள்ளதா அறியும் வழிமுறை
முதலில் உங்களின் கிரெடிட் ஸ்கோரை செக் செய்வது மூலம், பான் எண்ணில் வேறு யாராவது கடன் வாங்கியிருக்கிறார்களா என்பதை கண்டறிய முடியும்.
TransUnion CIBIL, Equifax, Experian அல்லது CRIF High Mark போன்றவை வழியாகவும் நீங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபாக்க முடியும்
அதேபோல், எஸ்பிஐ கார்டு, பேடிஎம், பேங்க் பஜார் போன்ற ஆப்களில் கிரெடிட் ஸ்கோர் சரிபார்க்கும் வசதி உள்ளது. செக் செய்திட பான் கார்டு விவரங்களுடன் பெயர், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள் இருந்தால் போதுமானது.
அதில் நீங்கள் கடன்வாங்காத தரவுகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக வருமானவரித்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil