நாட்டில் 61 கோடி பேரிடம் பான் கார்டு உள்ளது. இதில் 48 கோடி பேர் தங்களின் பான் கார்டை ஆதாருடன் இணைத்துள்ளனர். ஆதாருடன் பான் கார்டை ரூ.1000 அபராதத்துடன் இணைக்க மார்ச் 31, 2023 கடைசி நாளாகும்.
இந்நிலையில் மத்திய நேரடி வரிகள் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால் தங்களின் கார்டு செயலிழந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செபி உள்ளிட்ட அமைப்புகளும் முதலீட்டாளர்கள் பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைப்பது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளது. மற்ற முதலீட்டு நிறுவனங்களும் தனிநபர் பான்கார்டு எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளன.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் (செபி) மார்ச் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்திருந்தது. இதற்கிடையில், பான்கார்டு, ஆதார் இணைப்பு தொடர்பாக சில நிதி மோசடி அபாயங்களும் நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 13 கோடி பேரின் பான்கார்டு எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. இதனால் இந்த பான் கார்டு எண்கள் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/