பான் கார்டில் பெயர் மற்றும் விவரங்களை மாற்ற வேண்டுமா? இதோ ரொம்ப ரொம்ப ஈஸி!

இதற்கும் தேவை. அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்றவை.

pan card online: இணையவழியில் புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. தபால் வாயிலாக எந்த ஆவணங்களையும் சமர்பிக்க தேவையில்லை. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக இணையவழியில் செய்யலாம். இதன் மூலம் பான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.

தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக பான்கார்டில் மாற்றம் தேவைப்படும். கீழே உள்ள வழிமுறையில் ஆதார் பயன்படுத்தப்படுவதால் , அதில் பெயர் சரியாக இருந்தால் இந்த வழிமுறை மூலம் பான்கார்டில் பெயர் மாற்றம் செய்யலாம். இல்லையென்றால், பெயர் மாற்றம் செய்யப்பட்டஅல்லது தவறாக உள்ளதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். பெயர் மாற்றத்திற்கான அரசாணை, திருமண பத்திரிக்கையுடன் திருமண சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவை.

புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து ஆவணங்களும் இதற்கும் தேவை. அடையாள அட்டை, இருப்பிட சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் போன்றவை.

முதலில் ஆன்லைனில் விண்ணப்பத்தை பெறுவதற்க்கு என்எஸ்டிஎல் அல்லது யுடிஐடிஎஸ்எல் போர்ட்டைப் பயன்படுத்தி பெறமுடியும். மேலும் இந்தசேவைக்காக ரூ. 107 வரை கட்டணம் பெறப்படுகிறது. வெளிநாட்டு பயனர்களுக்கு ரூ.997 வரை சேவை வரி பெறப்படுகிறது.

//www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html இணையதளத்திற்கு சென்று ‘Application type’ என்ற மெனுவை கிளிக் செய்து ‘ Changes or correction in existing PAN data/ Reprint of PAN Card( No changes in existing PAN data) தேர்வு செய்யவும். பின்னர் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, Captcha வை உள்ளீடு செய்து ‘ Submit’ ஐ கிளிக் செய்யவும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close