ஆதார் அட்டையுடன் இணைக்காதவர்களின் பான் கார்டுகளால் எந்தப் பயனும் இல்லை என வருமான வரித்துறை தெளிவாக கூறியுள்ளது.
பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு பலமுறை கடந்த நிலையில், இம்முறை அதை நீட்டிக்க வருமான வரித்துறை முன்வரவில்லை.
இந்தக் காரணத்திற்காக பான் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் பான் எண்ணை அவர்களின் ஆதாருடன் இணைக்குமாறு இது தொடர்ந்து கூறிவருகிறது.
இந்த நிலையில், பான் மற்றும் ஆதார் எண்ணை 31 மார்ச் 2023 வரை கடைசி நாளாகும். அதற்குப் பிறகான சேவைக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படும்.
பான் எண்ணுடன் ஆதார் அட்டையை இணைக்காதவர்களுக்கு பல எச்சரிக்கைகளை வழங்கிய பின்னர், வருமான வரித்துறை இந்த முடிவை எடுத்துள்ளது.
பான் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி?
- வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைக.
- விரைவு இணைப்புப் பகுதிக்குச் (Quick Link section) சென்று, ஆதார் இணைப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒரு புதிய பக்கம் தோன்றும், அதில் உங்கள் ஆதார் விவரங்கள், பான் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- ‘நான் எனது ஆதார் விவரங்களைச் சரிபார்க்கிறேன்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் OTPயைப் பெறுவீர்கள். அதை உள்ளீட்டு, ‘சரிபார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- அபராதம் செலுத்திய பிறகு உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil