பான் கார்டு போட்டோ பிடிக்கலையா?ஆன்லைனிலே மாத்த ஒரு வழி இருக்கு!

பான் கார்டில் எழுத்துப் பிழைகள், கையொப்பம் உள்ளிட்டவற்றை திருத்துவது மட்டுமல்லாமல் போட்டோவையும் எளிதாக மாற்றிட முடியும். இந்த மாற்றங்களை ஆன்லைன் வழியாக பயனர்கள் எளிதாக மாற்றிவிடலாம்.

இந்திய குடிமக்களுக்கு பான் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது. குறிப்பாக வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய தேவையாக இருக்கிறது. 10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இத்தகைய முக்கிய ஆவணமான பான் கார்டில் எழுத்துப் பிழைகள், கையொப்பம் உள்ளிட்டவற்றை திருத்துவது மட்டுமல்லாமல் போட்டோவையும் எளிதாக மாற்றிட முடியும். இந்த மாற்றங்களை ஆன்லைன் வழியாக பயனர்கள் எளிதாக மாற்றிவிடலாம்.

பான் கார்டின் போட்டோவை ஆன்லைனில் மாற்றுவது எப்படி?

 • முதலில் NSDL-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://www.tin-nsdl.com/ செல்ல வேண்டும் அல்லது இந்த தளத்திற்கு https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html செல்ல வேண்டும்.
 • அடுத்ததாக Application Type ஆப்ஷன் கீழ் ‘Changes or corrections in existing PAN Data’ என்பதை தேர்வு செய்துகொள்ளவும்.
 • அதன்பிறகு எந்த Category என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், individual ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும்.
 • அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, Captcha வேரிபிகேஷன் செய்து, சப்மிட் கொடுக்க வேண்டும்
 • இப்போது KYC ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
 • அதில் ‘Photo Mismatch’மற்றும் ‘Signature Mismatch’ஆப்ஷன் திரையில் தோன்றும். அதில் விருப்பமானதை கிளிக் செய்ய வேண்டும்.
 • கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ‘Next’ கொடுக்க வேண்டும்
 • தொடர்ந்து, மாற்றங்கள் செய்திட அடையாளம், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றுக்கு சான்று வழங்க வேண்டும்.
 • அடுத்து, Submit பட்டனை கிளிக் செய்யவும்
 • மேலே உள்ள ஸ்டேப்களை வெற்றிகரமாக முடித்துவிட்டால், போட்டோ மற்றும் கையொப்பம் மாற்ற 101 ரூபாய் கட்டணம் ஜிஎஸ்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.
 • பேமெண்ட் முடிந்ததும், 15 இலக்க acknowledge number உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்
 • விண்ணப்பத்தை print out எடுத்து வருமான வரித் துறையின் பான் சேவை பிரிவுக்கு (PAN Service Unit) அனுப்பிவைக்க வேண்டும்.
 • இதன்பின் பான் கார்டில் உங்கள் போட்டோ மாற்றப்படும்.

உங்கள் அப்லிகேஷன் ஸ்டேடஸ் எந்தளவில் உள்ளது என்பதை, acknowledge number மூலம் டிரெக் செய்திட முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pan card update how to change photo via online

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com