/tamil-ie/media/media_files/uploads/2021/12/pan-1-1.jpg)
வருமான வரி செலுத்துவது, வங்கி பரிவர்த்தனைகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு போன்ற பல விஷயங்களுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக இருக்கிறது.
.10 இலக்கில் உள்ள எண் கொண்ட இந்த பிளாஸ்டிக் பான் கார்ட்டை ஒரு அடையாள ஆவணமாகவும் பயன்படுத்த முடியும். பான் கார்டை ஆதாருடன் இணைப்பது கட்டாயம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய முக்கிய ஆவணமான பான் கார்டு வைத்திருப்பவர்கள் செய்யும் சிறு தவறு காரணமாக, ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
பான் கார்டு விவரங்களைப் பூர்த்தி செய்யும்போது பிழைகள் இருக்கக் கூடாது. 10 டிஜிட் எண்ணை சரியாக பதிவிட வேண்டும்.
அதேபோல, ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரிச் சட்டத்தின் கீழ் மிகப்பெரிய அபராதம் விதிக்கப்படும்.உங்களின் வங்கி கணக்கு முடக்கப்படும். உங்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருந்தால் அதை வருமான வரித் துறையிடம் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
பான் கார்டை ஆன்லைனில் சமர்பிக்கும் வழிமுறையை இச்செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
- முதலில் IRS வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
- அதில், "Request For New PAN Card Or/ And Changes Or Corrections in PAN Data." என்பதை கிளிக் செய்த படிவத்தை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
- பின்னர், அந்த படிவத்தை பூர்த்திசெய்து ஏதெனும் NSDL அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
- அப்போது, கூடுதலாக வைத்திருக்கும் பான் கார்டையும் சமர்பிக்கலாம்.
குறிப்பு: முதல் பான் கார்டை சமர்ப்பிக்கும்போது இரண்டாவது பான் கார்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.