எல்ஐசி ஜீவன் சாரல் உள்ளிட்ட பிரபலமான காப்பீட்டு திட்டங்களை வழங்குகிறது. தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல நன்மைகளை இது வழங்குகிறது.
மேலும் பாலிசிதாரர்களுக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பின் கலவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொடர்ந்து, எல்ஐசி ஜீவன் சாரல் உங்களுக்கு நிலையான வருமானத்தை அளிக்கும். எல்ஐசி ஜீவன் சாரல் திட்டத்தின் மூலம் நீங்கள் ஆண்டு, அரையாண்டு மற்றும் காலாண்டு ஓய்வூதியங்களையும் பெறலாம்.
மேலும் இதில் பல்வேறு கட்டண விருப்பங்களும் உள்ளன. 40 முதல் 80 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் பிரீமியத்தை மொத்தமாகச் செலுத்த வேண்டும். அதன்படி, இந்தப் பாலிசியில் ஒருவர் ரூ.20 லட்சத்தை முதலீடு செய்தால், அவர் அல்லது அவளுக்கு ஆண்டு ஓய்வூதியமாக ரூ.1,24,000 கிடைக்கும்.
அதாவது, ஒவ்வொரு நபரும் ரூ.12000 வரை மாத ஓய்வூதியம் பெறலாம். சாரல் பென்ஷன் யோஜனாவில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.1,000 எடுக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/