/indian-express-tamil/media/media_files/BkFm7wT2kFG5ZP6kMsUM.jpg)
விஜய் சேகர் சர்மா
பேடிஎம் (Paytm) பேமெண்ட் வங்கி பிரிவின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர் பதவியில் இருந்து திங்கள்கிழமை (பிப்.26,2024) விஜய் சேகர் சர்மா தனது ராஜினாமா செய்தார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் தடைக்கு பதிலளிக்கும் விதமாக நிறுவனம் வாரியத்தை மறுசீரமைக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, “போதுமான வாடிக்கையாளர் அடையாளம் காணப்படாதது மற்றும் பேடிஎம்-க்கும் வங்கிக்கும் இடையே உள்ள தூரம் உள்ளிட்ட கடுமையான கவலைகள் காரணமாக வங்கி நடவடிக்கை எடுத்தது.
தொடர்ந்து, பேடிஎம் அதன் செயல்பாடுகளை மார்ச் 15 ஆம் தேதிக்குள் நிறுத்துமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது பேடிஎம் பங்குகள் சரிவுக்கு வழிவகுக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய அரசுக்குச் சொந்தமான மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் சீனிவாசன் ஸ்ரீதர் மற்றும் பாங்க் ஆஃப் பரோடாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் கர்க் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற இந்திய நிர்வாக சேவை அதிகாரிகள் பேடிஎம் நிறுவனத்தில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தலைமை செயல் அதிகாரி (Paytm Payments Bank CEO) சுரிந்தர் சாவ்லா, 'புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாட்டுத் தரங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள். இணக்கம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவார்கள்” என்றார்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Paytm’s Vijay Shekhar Sharma steps down from payments bank board
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.