புதிய மற்றும் பழைய வரி விலக்கு வரம்பு என்ன?
புதிய வரி விதிப்பின் கீழ், தற்போதைய அடிப்படை வரி விலக்கு வரம்பு ரூ. 3 லட்சமாக உள்ளது, 2023ல் ரூ. 2.5 லட்சத்தில் இருந்து உயர்த்தப்பட்டது. பழைய வரி முறையின் கீழ், ரூ. 2.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் வரிப் பொறுப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், வரவிருக்கும் பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிப்படை வரி விலக்கு வரம்பை தற்போதுள்ள ரூ. 3ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.