இனி குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் ஊழியர்களுக்கும் பென்ஷன் !

அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவை

By: June 11, 2019, 2:36:17 PM

தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆதரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பள கணக்கில் பிஎஃப் பிடித்தம் நடைமுறையில் இருக்கு. ஒரு ஊழியரின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதம் பங்களிப்பும் பிஎஃப் கணக்கில் பிரித்து போடப்படும்..

ஊழியர் விரும்பும் காலத்தில் அல்லது அவசர காலத்தில் இந்த பிஎஃப் தொகை கட்டாயம் உதவிக்கரமாக இருக்கும். பி.எஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஈ.பி.எஸ் (Employee Pension Scheme) எனப்படும் பென்ஷனும் உள்ளது. இதுவும் பிஎஃப் தொகை போல தான். உங்களின் சம்பள கணக்கு மற்றும் நிறுவனத்தின் சார்பில் 8.33 சதவீதம் பென்ஷன் திட்டத்தின் பங்களிப்பாக டெபாசிட் செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு பென்ஷன் சேவையில் கொண்டுவரப்பட்ட அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படி (Dearness Allowance) என இரண்டும் சேர்த்து மாதம் 15,000 ரூபாய்க்கும் குறைவாக மொத்த சம்பளம் வாங்கும் ஊழியர்க்ளின் கணக்கில் ஈபிஎஸ் பங்களிப்பு பிடிக்க தேவையில்லை என்று கூறப்பட்டது.

இதனால் மாதம் 15,000 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு பென்ஷன் பெற முடியாத சூழல் இருந்தது இதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018 ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பு சரியென தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என கேரள உயர் நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். இனி 15,000 க்குள் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்ஷன் சேவையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pension for salaried employees

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X