கணவன்,மனைவி இருவருக்கும் ரூ10 ஆயிரம் பென்சன்: இந்த ஸ்கீம் பற்றி தெரியுமா?

இந்த திட்டத்தில், தனித்தனியே இரண்டு கணக்குகளை தொடங்குவது மூலம் கணவர் , மனைவி இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை பென்சன் தொகை கிடைக்ககூடும். வரி செலுத்தும் தம்பதியினர் வரிச் சலுகைகளையும் பெறலாம்.

திருமணமான தம்பதிகள் தங்கள் பணி ஓய்வை திட்டமிடுகிறீர்கள் என்றால், அடல் பென்சன் யோஜனா சிறந்த திட்டமாகும். இது பாதுகாப்பானது மட்டுமின்றி முதலீட்டுக்கு ஏற்றப்படி நல்ல வருமானமும் கிடைக்ககூடியது.

இந்த திட்டத்தில், தனித்தனியே இரண்டு கணக்குகளை தொடங்குவது மூலம் கணவர் மற்றும் மனைவி இருவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரை பென்சன் தொகை கிடைக்ககூடும். வரி செலுத்தும் தம்பதியினர் வரிச் சலுகைகளையும் பெறலாம்.

அடல் பென்சன் யோஜனாவில் யார் முதலீடு செய்யலாம்?

2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் பென்சன் யோஜனா, திட்டம், அமைப்புசாரா தொழிலாளர்களை ஊக்குவித்து, அவர்களது எதிர்கால நலனுக்காக பென்சன் பெற கொண்டுவரப்பட்டது. ஆனால், தற்போது 18 முதல் 40 வயது வரையிலான அனைத்து இந்தியர்களும் அடல் பென்சன் யோஜனாவில் முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கு இருந்தால், அடல் பென்ஷன் யோஜனாவில் எளிதாக முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் 60 வயதை தொட்டபின் பென்சன் வரத் தொடங்கும்.

திட்டத்தின் நன்மைகள்

இந்த திட்டத்தில், உங்களது முதலீடுக்கு ஏற்ப, மாதம் ரூ.1000, ரூ.2000, ரூ.3000, ரூ.4000 அல்லது அதிகப்பட்சம் ரூ.5000 என்ற அளவில் பென்சன் பெறலாம். இதில், இணைய ஆதார் நம்பரும், மொபைல் நம்பரும் அலசியமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் முதலீட்டாளர் எவ்வளவு விரைவில் முதலீடு செய்கிறாரோ, அந்த அளவுக்கு அதிக பலன்களை பெற முடியும். ஒரு நபர் 18 வயதில் அடல் பென்ஷன் யோஜனாவில் சேர்ந்தால், 60 வயதாகும் போது, அவருக்கு மாதந்தோறும் ரூ. 5000 ஓய்வூதியமாக கிடைக்கும். இதற்கு மாதம் ரூ.210 டெபாசிட் செய்ய வேண்டும்.

10,000 ஓய்வூதியம் பெறுவது எப்படி?

30 வயதுக்கு கீழான தம்பதியினர் இரண்டு தனிக் கணக்குகளை தொடங்கி மாதம் மொத்தம் 10000 ரூபாய் பென்சன் பெற முடியும். இதற்கு, நீங்கள் மாதம் 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.அதே போல், இருவருக்கும் 35 வயது என்றால், மாதந்தோறும் 902 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும், அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்வது முதலீட்டாளர்கள் வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளைப் பெறவும் உதவியாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pension scheme for married couple get rs 10000 monthly on retirement

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com