Pension Scheme : மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் எதிர்பார்க்கும் பலருக்கும் கூடுதல் ஓய்வூதிய திட்டம் இருப்பது தெரியாது. ஆனால் வயதான காலத்தில் மூத்த குடிமக்கள் நிம்மதியாக வாழ நிச்சயம் இந்த ஓய்வூதிய திட்டம் கை கொடுக்கும். ஒருவர் தன்னுடைய 80 வயதிற்கு மேல் தான் இந்த திட்டத்தின் நன்மைகளை அடைய முடியும். இந்த திட்டம் அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் மூலம் 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த துறை ட்விட்டரில் ட்வீட் மூலம் இந்தச் சேவையைப் பயன்படுத்த சில வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியது.
Advertisment
ஓய்வூதியதாரருக்கு 80 வயது அல்லது அதற்கு மேல் ஆகும்போது, ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு செலுத்த வேண்டிய 20-100 சதவிகிதம் வரை கூடுதல் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுகிறது. குடும்ப ஓய்வூதியத் தொகையும் ஒரு சேவையாளராக அவரது கடைசி சம்பளத்தில் 30% வழங்கப்படுகிறது.
பயனாளர் 80 வயதை அடையவும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. உதாரணத்திற்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் அவர் 80 வயதை அடைகிறார் என்றால் அவருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும். தன்மூலம், மத்திய அரசின் கீழ் குடும்ப ஓய்வூதியத்தின் அதிகபட்ச தொகை மாதத்திற்கு ரூ .1,25,000 மற்றும் அவ்வப்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய டியர்னெஸ் ரிலீஃப் (DR) குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil