உங்க முதுமை காலத்தில் மாதம் 40,000 உங்க கைக்கு வர இதை செய்தாலே போதும்!

முதலீட்டை தொடங்கினால், அதிகபட்ச பலன்களைப் பெறுவீர்கள்

By: Updated: November 27, 2020, 03:26:43 PM

pension scheme pension investment : உங்கள் மனைவி, ஒரு ஹோம் மேக்கர் என்றால், அவர், தனது வயதான காலத்தில் மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லாத வகையில், நீங்கள் இன்றே திட்டமிடலாம். நீங்கள் குறைந்த வயதில் முதலீட்டை தொடங்கினால், அதிகபட்ச பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் மனைவியின் வயது 30 ஆண்டுகள் என்றால், கீழ்கண்ட வகையில், இந்த திட்டம் இருக்கும்.

NPS, அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதந்தோறும் ₹.44,793 ஓய்வூதியம் பெறலாம்.NPS என்பது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதிய மற்றும் முதலீட்டு திட்டமாகும். பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அடிப்படையிலான வருவாய் மூலம் மக்களுக்கு முதுமை காலத்தில், பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் ((PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது. PFRDA நிறுவிய தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST), NPS அதாவது தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து முதலீடுகளுக்கு பொறுப்பு வகிக்கும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும்.

மொத்த முதலீட்டு காலம்: 30 ஆண்டுகள்

மாத பங்களிப்பு: ரூ .5,000

எதிர்பார்க்கப்படும் வருமானம்: 10 சதவீதம்

முதிர்வு காலத்தில் கிடைக்கும் மொத்த ஓய்வூதிய நிதி: ரூ .1,11,98,471

வருடாந்திர திட்டத்தை பெற ரூ .44,79,388

8 சதவீத வருடாந்திர வட்டியில் ரூ .67,19,083

மாத ஓய்வூதியம்: ரூ .44,793

18-65 வயதுக்குட்பட்ட இந்தியாவின் எந்தவொரு தனிப்பட்ட குடிமகனும் (குடியுரிமை மற்றும் குடியுரிமை இல்லாதவர்கள்) கணக்கை தொடக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் ஒன்றுக்கு மேற்பட்டகணக்குகளைத் திறக்க அனுமதி இல்லை என்றாலும், ஒரு தனிநபர் என்.பி.எஸ்ஸில் ஒரு கணக்கையும், அடல் பென்ஷன் யோஜனாவில் மற்றொரு கணக்கையும் வைத்திருக்க முடியும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pension scheme pension investment pension apply sbi netbanking

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X