Advantageous of joint home loan : நாம் வீட்டுக் கடனுக்காக விண்ணப்பிக்கும் போது நம்முடைய வருமானம், க்ரெடிட் ஸ்கோர், வேலை, வருமான நிலைத்தன்மை, வயது ஆகியவை கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் தான் கடன்கள் வழங்கப்படும். இந்த தகுதிகளில் ஏதேனும் ஒன்று குறையும் பட்சத்தில் உங்களின் கடனுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆனால் ஒருவருடன் இணைந்து கூட்டாக கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
கடன் வாங்க விண்ணப்பிக்கும் போது உங்களுடன் சேர்ந்து கடன் வாங்கும் நபர் யார் என்பதையும், உங்களுடன் இணைந்து கடன் வாங்க தகுதியான உறவா அது என்பதையும் அவர்கள் சோதிப்பது உண்டு. அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைத் துணைவர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது இரத்த உறவுகள் கூட்டு வீட்டுக் கடனின் இணை விண்ணப்பதாரர்களாக மாற அனுமதிக்கின்றனர். சில கடன் வழங்குநர்கள் உடன்பிறப்புகளையும் திருமணமாகாத இணையர்களையும் இணை விண்ணப்பதாரராக ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஹவுசிங் ப்ரோபர்ட்டிக்கு உரிமையாளர்களாக இருக்கின்ற பட்சத்தில் அவர்கள் அனைவரும் கோ-பாரோவர்களாக இணைக்கப்படுவார்கள்.
மேலும் படிக்க :பிரச்சனையற்ற பாகப்பிரிவினை ; உயில்கள் எழுதுவது எப்படி?
கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்
இணை விண்ணப்பதாரரின் வருமானம் மற்றூம் க்ரெடிட் ப்ரோஃபைல் உங்களின் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இணை விண்ணப்பதாரர் சமமாக பொறுப்பேற்பதால், அது கடன் வழங்குபவருக்கான கடன் அபாயத்தைக் குறைக்கிறது. தவணையை திருப்பி செலுத்தும் போது இணை விண்ணப்பதாரரின் வருமானமும் கருதப்படுவதால், இணை விண்ணப்பதாரரைச் சேர்ப்பது ஒரு பெரிய கடன் தொகையைப் பெற உதவும்.
பெரும்பாலான வீட்டுக் கடன்கள், கடன் பெற்றவர் 70 வயதை அடையும் போது அடைத்துவிடுகிறார். 60 வயதை நெருங்கும் நபர்களுக்கு இதனால் லோன் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது மேலும் குறுகிய காலத்தைத் தேர்வு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக அளவில் தவணை தொகை செலுத்தும் நிலையும் உருவாகிறது. இளைய இணை விண்ணப்பதாரரைச் சேர்ப்பது நீண்ட கால அவகாசத்துடன் வீட்டுக் கடனைப் பெற உதவும்.
வரி விலக்கு மற்றும் இதர சலுகைகள்
முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் வீட்டுக் கடனின் இணை விண்ணப்பதாரர் (கள்) இருவரும் வட்டி மற்றும் அசல் திருப்பிச் செலுத்துதலுக்கான பங்களிப்பின் படி சுயாதீனமாக வரி சலுகைகளைப் பெற முடியும். பிரிவு 24 பி இன் கீழ் சொத்துக்களுக்கான வட்டி கூறுகளை திருப்பிச் செலுத்துவதில் ரூ .2 லட்சம் வரை வரி விலக்கு முதன்மை விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரர் (கள்) ஆகியோரால் கோரப்படலாம். இதேபோல், வீட்டுக் கடனின் முதன்மைக் கூறுகளை திருப்பிச் செலுத்துவதற்காக பிரிவு 80 சி இன் கீழ் ரூ .1.5 லட்சம் வரை தனித்தனியாக வரி விலக்கு பெறலாம். சம்பந்தப்பட்ட சொத்தின் இணை உரிமையாளராக இருந்தால் மட்டுமே இணை கடன் வாங்குபவர் (கள்) வரி சலுகைகளைப் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பெண்களுக்கு குறைந்த வட்டி
வீட்டுக் கடன் வழங்கும் நிறைய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், பெண்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியில் 5 bps வரை குறைந்த வட்டியை வழங்குகிறது. இதனால் நீண்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை நம்மால் சேமிக்க இயலும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.