Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

FD -ல போடுறதுதான் லாபம்னு யாரு சொன்னா... இந்த SB அக்கவுன்ட் வட்டியைப் பாருங்க!

பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதை விட, சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிக வட்டியை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

Written by WebDesk

பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதை விட, சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிக வட்டியை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

author-image
WebDesk
25 Apr 2021 19:22 IST

Follow Us

New Update
FD -ல போடுறதுதான் லாபம்னு யாரு சொன்னா... இந்த SB அக்கவுன்ட் வட்டியைப் பாருங்க!

Business News in Tamil : மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வீதத்தை குறைத்துள்ள நிலையில், பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன. ரெப்போ வீதம் குறைக்கப்பட்ட நிலையில், சமீப காலங்களில் வங்களின் டெபாசிட் திட்டங்களின் கவர்ச்சியை பாதித்துள்ளது. முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இப்போது வைப்புத்தொகையின் காலத்தைப் பொறுத்து பொது மக்களுக்கு தங்கள் நிலையான வைப்புகளில் 2.5% முதல் 5.5% வரை வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. மேலும், மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் பிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 6 சதவீதமாக இருந்து வருகிறது.

Advertisment

சில சிறிய தனியார் துறை வங்கிகள் மற்றும் சிறு நிதி நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட அளவு சராசரி இருப்பை சேமிப்புக் கணக்கில் பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை வட்டியை வழங்கி வருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை பிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்வதை விட, சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்துவதன் மூலம் அதிக வட்டியை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

நிலையான வைப்புத்தொகை மற்றும் சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டித் தொகை வாடிக்கையாளர்களின் வரிச்சட்டத்திம் படி, வரி விதிக்கப்படும். இருப்பினும், பிரிவு 80 டி.டி.ஏ படி, சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டி வருமானத்தில் ரூ .10,000 குறைப்பு வழங்கப்படுகிறது. எனவே ஒரு சிறிய சேமிப்பு வங்கி அல்லது தனியார் துறை வங்கியின் சேமிப்புக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகை, ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனம் மற்றும் தனியார் துறை வங்கியில் நிலையான வைப்புத்தொகையை விட அதிக வரிக்கு பிந்தைய வட்டியை ஈட்டி தரக் கூடும்.

தனியார் வங்கியான ஐடிஎஃப்சி, ஒரு கோடிக்கும் குறைவான சேமிப்பு கணக்கு முதலீடுகளுக்கு 6 சதவீதம் வட்டியையும், ஒரு கோடி முதல் 5 கோடி வரையிலான சேமிப்புகளுக்கு 5 சதவீத வட்டியினையும், 5 முதல் 10 கோடி ரூபாய் வரையிலான சேமிப்புகளுக்கு 4 சதவீதம் வரை வட்டியை வழங்குகிறது. அதேபோல, மற்றுமொரு தனியார் வங்கியான இண்டஸிண்ட் வங்கி, ஒரு லட்சத்துக்கும் குறைவான சேமிப்புகளுக்கு 4 சதவீத வட்டியையும், 10 லட்சம் வரையிலான சேமிப்பு முதலீடுகளுக்கு 5 சதவீத வட்டியையும் வழங்கி வருகிறது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!