/tamil-ie/media/media_files/uploads/2021/10/loan-1.jpg)
Personal loan: கார் லோன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்று அதிக அளவில் தலைவலி தராத, அதே நேரத்தில் நம்முடைய நிதி பிரச்சனைகளை தீர்க்கும் மிக முக்கியமான கடன் என்றால் பெர்சனல் லோன் ஆகும். பிணையம் ஏதும் செலுத்த வேண்டாம் என்பதால் இது பாதுகாப்பற்ற கடனாக கருதப்படுகிறது. எனவே தான் மற்ற லோன்களைக் காட்டிலும் பெர்சனல் லோன்களுக்கான கடன் சற்று அதிகமாகவே உள்ளது/
நீங்கள் பெர்சனல் லோன் வாங்குவதற்கு முன்பு உங்களின் க்ரெடிட் ஸ்கோர் மற்றும் நிதி நிலைத்தன்மை ஆகியவற்றை வங்கிகள் சோதிப்பதற்கு முன்பு நீங்கள் ஒரு முறை சோதித்துக் கொள்ளுங்கள்.
சுய தொழில் நடத்தும் நபர்களுக்கும், மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கும் வழங்கப்படும் பெர்சனல் லோனுக்கான தகுதியானது வெவ்வேறாக இருக்கும். மாத சம்பளம் வாங்கும் நபர்கள் 3 மாத பே ஸ்லிப்களை வழங்க வேண்டும். அதே போன்று ஃபார்ம் 16 மற்றும் கடந்த ஆண்டுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றையும் சமர்பிக்க வேண்டும். சுய தொழில் நடத்தும் நபர்கள் என்றால் நீங்கள் குறைந்தபட்சம் அந்த தொழில் ஈடுபட்டிருத்தல் அவசியம். மேலும் ஆடிட் செய்யப்பட்ட நிதி தொடர்பான சான்றுகளை சமர்பிக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/personal-loan-chart.jpg)
கூடுதலாக நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கடன்களை வாங்கியிருந்தால் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்க முதலில் அந்த கடனை நீங்கள் கட்டியிருக்க வேண்டும். மேலும் உங்களின் மாதாந்திர தவணை மற்றும் கிரெடிட் கார்ட் பில்களை தாமதமின்றி செலுத்துவதையும் உறுதி செய்யுங்கள்.
உங்களுக்கான தேவைக்கு ஏற்ற வகையில் கடன்களை வாங்குங்கள். இது உங்களுக்கு தேவையற்ற நிதி தொடர்பான அழுத்தங்களை தருவதை குறைக்கும். மற்ற நிதி வழங்கும் நிறுவனங்களுடன் வட்டியை ஒப்பிட்டு எங்கு குறைவாக வட்டி நிர்ணயிக்கப்படுகிறதோ அங்கே கடனை வாங்குவது நல்லது.
நீங்கள் 5 ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும் என்ற கால நிர்ணயத்துடன் நீங்கள் ரூ. 5 லட்சம் கடன் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கான மாதாந்திர தவணை தொகை எவ்வளவு இருக்கும் என்பதை மேலே பட்டியலிட்டுள்ளோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.