/tamil-ie/media/media_files/uploads/2018/11/idea-7.jpg)
பெர்சனல் லோன்
வங்கிகளில் பெர்சனல் லோன் எடுக்க போறீர்களா? முதலில் நீங்கள் இதையெல்லாம் தெரிந்துக் கொள்வது கட்டாயம்.
பெர்சனல் லோன்:
1. தனிநபர் கடனை அனைத்து இந்திய வங்கிகளும் வழங்குகின்றன. இதேபோல் வங்கி சாரா நிறுவனங்களும் (என்பிஎஃப்சி) தனிநபர் கடன்கள் வழங்குகின்றன . எனினும் இந்நிறுவனங்கள் வங்கிகளை விட அதிக வட்டியில், அதேநேரம் விரைவாக கடன்கள் வழங்குகின்றன.
Read More: ஃபிக்சட் டெப்பாசிட்: எஸ்.பி.ஐ - இதர வங்கிகள் புதிய வட்டி விகிதம் தெரியுமா?
2. பெர்சனல் லோனுக்காக விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முன்னர் கடன் வாங்க விரும்புவரின் வருமானம் ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்பதை அனைத்து வங்கிகளும் உறுதி செய்து கொள்கின்றனர்.
3. அதிக வருமானத்துடன் விண்ணப்பம் செய்பவரின் கிரிடிட் ஸ்கோரும் பரிசீலிக்கப்படும், ஸ்கோர் மோசமாகவோ / குறைவாகவோ இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
4. அவசரத் தேவையை முன்னிட்டே எல்லோரும் தனிநபர் கடனை வாங்குகின்றனர் என்பதால், கெடு காலத்துக்கு முன்னதாகவே அவர்கள் பெரிய தொகையை திருப்பிச் செலுத்த விரும்பலாம்.
இதையும் படியுங்கள்.. பெர்சனல் லோன் வேண்டுமா? அப்ப கண்டிப்பா உங்களிடம் இதெல்லாம் இருக்க வேண்டும்!
5. ஆகையால், நீங்கள் பெறவிருக்கும் தனிநபர் கடன் திட்டத்தில் தவணைகளை முன்செலுத்த, அல்லது பகுதி தொகை செலுத்த அல்லது கடன் பளுவைக் குறைக்க பெரிய தொகையை செலுத்த அனுமதி உண்டா? என்பதை அவசியம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
6.ஒரு சில வங்கிகள், அவர்கள் வட்டி இழப்பை ஈடுகட்டும் நோக்கத்துடன் கூடுதல் கட்டணம் வசூலிப்பர், மற்றும் சில வங்கிகள் இதற்கு கட்டணம் வசூலிக்காவிட்டாலும், வரம்புகளுக்கு உட்பட்டு அனுமதிப்பர்.
7. தனிநபர் கடனுக்கு கியாரண்டி, பிணைய சொத்து எதுவும் தேவையில்லை. சராசரியாக வங்கிகள் 11% முதல் 16% வரை வட்டி வசூலிக்கின்றனர், வங்கி சாரா நிறுவனங்கள் மிக அதிக வட்டி விகிதத்தில் கடனை வசூலிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.