/tamil-ie/media/media_files/uploads/2018/11/idea-14.jpg)
பெர்சனல் லோன்
பெர்சனல் லோனுக்கு இன்றைய அவசர உலகில் பலரும் வங்கிகளில் விண்ணபித்துவிட்டு தவமாய் தவம் கிடக்கின்றனர். பெர்சனல் லோன் என்பது எந்த லிஸ்டிலும் போய் சேரும். ஒருவர் தனக்கு அவசரமாக பண தேவை இருந்தால் அதற்கு வேறு எங்கும் சென்று அலையாமல் வங்கிகளில் இருக்கும் அருமையான ஆப்ஷனை பயன்படுத்தி எளிதாக கடன் பெறலாம்.
சிலருக்கு விண்ணபித்த உடனே பெர்சனல் லோன் கிடைத்து விடும். ஆனால் பலருக்கும் சரியாக ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பெர்சனல் லோன் கேன்சல் ஆகிவிடும். இந்த பிரச்சனையில் உங்களுக்கு உதவும் வகையில் தனி நபர் கடனுக்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் என்னென்ன என்ற தகவல்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
ப்ளிஸ் படிங்க.. பெர்சனல் லோன் எடுப்பதற்கு முன்பு இதையெல்லாம் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!
1. கடைசி 6 மாத வங்கி அறிக்கை.
2. தணிக்கையாளரிடம் அங்கீகாரம் பெற்ற கடைசி இரண்டு ஆண்டுகளுக்கான வருமானவரி தாக்கல் ஆவணங்கள்(வங்கிகள் கேட்டால் மட்டுமே)
3. ரேசன் அட்டை, ஆதார் அட்டை, அடையாள ஆவணம்.
4. ஏற்கனவே எடுத்த வங்கிகடன் பற்றிய தகவல்கள்
5. தனியுரிமை ஆவணம்
6. சம்பள கணக்கு
7. நடப்பு பணி சேர்க்கை கடிதம்
8. உத்தியோக சான்றிதழ் கல்வி ஆவணம்
9. ஓட்டுநர் உரிமம், வருமான சான்றிதழ்
10. ஃபான் அட்டை
மேற்கண்ட அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தால் நீங்கள் விண்ணபித்த 15 நாட்களில் உங்களுக்கு பெர்சனல் லோன் கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.