அத்தியாவசிய தேவைகளைத் தவிர, பிற நோக்கங்களுக்காக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத அவசரநிலைகளுக்கு, ஒருவர் அவசர நிதியை வைத்திருக்க வேண்டும். இருப்பினும், சரியான நிதி திட்டமிடலின் படி நிதியை வைத்திருந்தாலும், ஒருவருக்கு திடீரென பணம் தேவைப்படலாம்.
"ஒவ்வொரு ரூபாய்க்கும் திட்டமிடல் மற்றும் கணக்கு வைத்திருந்தாலும், அவசரமாக நிதி உதவி தேவைப்படும் சூழ்நிலைகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். குறுகிய கால நிதி நெருக்கடியை எளிதாக்க தனிநபர் கடன் வாங்கலாம். அல்லது ஒரு பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) எதிராக கடன் வாங்கலாம்,” என்று InCred Finance இன் ரிஸ்க் & அனலிட்டிக்ஸ் தலைவர் பிரித்வி சந்திரசேகர் கூறினார்.
பிபிஎஃப் மீதான கடனுக்கும் தனிநபர் கடனுக்கும் இடையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?
இரண்டின் நன்மை தீமைகளை ஒப்பிட்டுப் பார்க்க, சந்திரசேகர் பின்வரும் அம்சங்களைப் பட்டியலிடுகிறார், இது உங்களுக்கு சிறந்த முடிவை எடுக்க உதவும்.
அணுகல்
நல்ல கிரெடிட் ஸ்கோர், வயது, நிலையான வருமானம் போன்ற சில தேவையான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்தால், தனிநபர் கடன் விரைவாகக் கிடைக்கும். பிபிஎஃப்-ஐ பொறுத்தவரை, பிபிஎஃப் கணக்கு தொடங்கிய 3 வது முதல் 6 வது ஆண்டு வரை பிபிஎஃப் கணக்கிற்கு எதிராக நீங்கள் கடன் பெற அனுமதிக்கப்படுவீர்கள். இதன் பொருள் நீங்கள் FY15-16 இல் உங்கள் PPF கணக்கைத் திறந்திருந்தால், 3ஆம் ஆண்டு அதாவது FY17-18க்குள் கடனைப் பெற அனுமதிக்கப்படுவீர்கள். நீங்கள் ஆறாவது ஆண்டு வரை மட்டுமே கடனைப் பெறத் தகுதி பெறுவீர்கள். அதாவது FY20-21. மேலும் இதில் கடன் பெறுவதற்கு சிறிது கால அவகாசம் எடுக்கும்.
கடன்தொகை
தனிநபர் கடனில், நீங்கள் பெறும் கடனுக்கு உச்சவரம்பு இல்லை. இது வங்கியின் கடன் அளவுகோல்களுக்கு ஏற்ப மாறுபடலாம். ஆனால் பெரும்பாலும், நீங்கள் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், நீங்கள் பெறும் கடனின் அளவில் எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை. பிபிஎஃப் விஷயத்தில், வாங்கக்கூடிய கடன் தொகையுடன் ஒரு எச்சரிக்கை இணைக்கப்பட்டுள்ளது. திட்ட விதிகளின்படி, நீங்கள் பெறக்கூடிய கடனின் அளவானது, கடனுக்கு விண்ணப்பித்த ஆண்டிற்கு முந்தைய இரண்டாவது ஆண்டின் இறுதியில் கணக்கில் இருந்த தொகையில் 25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, FY21 இல் நீங்கள் கடனைப் பெற்றால், கடனின் அளவு FY19 இல் உங்கள் கணக்கில் உள்ள இருப்பில் 25 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.
கடன் கால அளவு
தனிநபர் கடனை 6 ஆண்டுகள் வரை பெறலாம். PPF விஷயத்தில், கடன் பெறப்பட்ட 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
வட்டி விகிதம்
தனிநபர் கடன் பாதுகாப்பற்றதாக இருப்பதால், அதற்கான வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருக்கும். அவை ஆண்டுக்கு 10-20 சதவிகிதம் வரை இருக்கலாம். பிபிஎஃப் கணக்கிற்கு எதிராக எடுக்கப்பட்ட எந்தவொரு கடனுக்கும், தொகையைப் பொருட்படுத்தாமல் 1 சதவீத வட்டி விதிக்கப்படும். இருப்பினும், கடனை திருப்பிச் செலுத்தும் வரை உங்கள் பிபிஎஃப் கணக்கு வட்டி ஈட்டாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, பயனுள்ள வட்டி விகிதம் நிலவும் வட்டி விகிதம் + 1 சதவீதம்.
"குறுகிய காலத்திற்கு உங்களுக்கு ஒரு சிறிய தொகை தேவைப்படும் போது PPF க்கு எதிரான கடன் சிறந்த வழி. அதேநேரம் நெகிழ்வான கால அவகாசம் மற்றும் கணிசமான தொகை தேவைப்படும் போது, தனிநபர் கடன் மிகவும் பொருத்தமானது," சந்திரசேகர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.