பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனும், அடமானக் கடனும் அடிப்படையில் வேறுபாடானவை.
ஒருவருக்கு நிதி தேவைப்படும்போது பெர்சனல் லோன் வாங்கலாமா அல்லது அடமானக் கடன் பெறலாமா என்ற எண்ணம் மேலொங்கும். பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடனும், அடமானக் கடனும் அடிப்படையில் வேறுபாடானவை. இரண்டிற்கும் வெவ்வேறு வட்டிகள் விதிக்கப்படுகின்றன.
Advertisment
பெர்சனல் லோன்
பெர்சனல் லோன் பெற அடிப்படையாக ஆதார் மற்றும் பான் கார்டு தகவல்கள் உள்ளன. சம்பளம் பெறும் ரசீது இருந்தால் பெர்சனல் லோன் இன்னமும் எளிதாகும். இதில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் காலம் ஆகும். இந்த நாள்களுக்குள் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும்.
பொதுவாக பெர்சனல் லோனுக்கு 16 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி விதிக்கப்படுகின்றன. அது வங்கி அல்லது நிதி நிறுவனத்தை பொறுத்து மாறுபடும்.
Advertisment
Advertisements
அடமானக் கடன்
அடமானக் கடன் என்பது தங்கம், பத்திரம் உள்ளிட்டவற்றை அடமான வைத்து பெறப்படுவது ஆகும். சில நேரங்களில் ஃபிக்ஸட் டெபாசிட், எல்.ஐ.சி. உள்ளிட்ட முதலீடுகள் மீதும் இந்த அடமான கடன்கள் கொடுக்கப்படுகின்றன. இதில் 10 சதவீதத்துக்கும் குறைவாகவே வட்டி உள்ளது. அந்த வகையில் பெர்சனல் லோன் மற்றும் செக்யூரிடிஸ் லோன் கடன் விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
மேற்கூரிய தகவல்கள் வங்கி, நிதி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டன. இது ஏப்.4,2023ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.
எண்
வங்கி பெயர்
தனிநபர் கடன் (%)
அடமானக் கடன் (%)
01
பேங்க் ஆஃப் மகாராஷ்ரா
10.00
11.45
02
கோடக் வங்கி
10.25
8.50
03
பி.என்.பி
10.40
12.50
04
ஆக்ஸிஸ் வங்கி
10.49
9.99
05
பேங்க் ஆஃப் பரோடா
10.90
10.90
06
இந்தியன் வங்கி
10.90
10.95
07
எஸ்பிஐ
11.00
11.00
08
ஐடிபிஐ வங்கி
11.00
10.10
09
பஞ்சாப் அண்ட் நேஷனல் வங்கி
11.15
10.05
10
பெடரல் வங்கி
11.49
12.50
11
தனலட்சுமி வங்கி
12.40
8.80
12
யூகோ வங்கி
12.45
12.45
13
கரூர் வைஸ்யா வங்கி
12.50
10.50
14
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
12.50
12.80
15
கனரா வங்கி
13.60
14.75
16
கர்நாடகா வங்கி
14.12
13.09
17
பேங்க் ஆஃப் இந்தியா
14.85
13.85
வங்கி வட்டி விகிதம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“