சுயதொழில் செய்பவர்களுக்கான பெர்சனல் லோன்: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

சுயதொழில் செய்பவர்கள் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால், அவர்கள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.

சுயதொழில் செய்பவர்கள் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால், அவர்கள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.

author-image
WebDesk
New Update
Investment of SSY Scheme in Rs 4000 will become Rs22 lakh on maturity

சுயதொழில் செய்பவர்கள் தங்கள் பணிக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவது அல்லது வருமானம் குறைந்த மாதங்களில் தங்கள் பணிகளை தொடர மூலதன தேவைகளை சமாளிப்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காக தனிநபர் கடனை நாடலாம். இந்தக் கடன்கள், அவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு முக்கிய கருவியாக அமைகின்றன.

Advertisment

தற்போது, தனிநபர் கடன் பெறுவது முன்பு போல் கடினம் இல்லை. ஆனால், சுயதொழில் செய்பவர் தனிநபர் கடன் பெறத் தகுதியானவரா? அப்படி என்றால், அவர்கள் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? அந்த வகையில், சுயதொழில் செய்பவர்கள் தனிநபர் கடனை பெறுவதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இங்கு காண்போம்.

வருமான வரி கணக்கு (ITR): சுயதொழில் செய்பவர்களுக்கு மாத வருமான அறிக்கை இல்லாததால், அவர்கள் தங்கள் வருமானத்தை வருமான வரிக் கணக்கு மூலம் நிரூபிக்க வேண்டும். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளின் வருமான வரி கணக்குகள், இந்தக் காலகட்டத்தில் சுயதொழில் செய்பவர் ஈட்டிய வருமானத்தை காட்டும் ஒரு முக்கியமான சான்றாகும். 

கிரெடிட் ஸ்கோர் (Credit Score): கடன் ஒப்புதலை பெறுவதற்கு கிரெடிட் ஸ்கோர் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது அவசியம். ஒரு சுயதொழில் செய்பவர் கிரெடிட் கார்டு வைத்திருந்தால், பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது மிகவும் முக்கியம். சரியான நேரத்தில் கடன் தவணைகள் மற்றும் கிரெடிட் கார்டு பில்களை செலுத்துவதன் மூலம் நல்ல கிரெடிட் ஸ்கோரை உருவாக்க முடியும். இது வங்கிகளுக்கு உங்கள் நிதி ஒழுக்கத்தை நிரூபித்து, கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Advertisment
Advertisements

அவசர தேவைக்கு மட்டும் (Only for urgency): தனிநபர் கடன்களுக்கு பொதுவாக அதிக வட்டி விகிதம் இருக்கும். எனவே, மிகவும் அத்தியாவசியமான மற்றும் அவசர தேவைகளுக்கு மட்டுமே தனிநபர் கடனை பெறுவது நல்லது. உதாரணமாக, திடீர் மருத்துவ செலவுகள், முக்கியமான பணி உபகரணங்கள் வாங்குதல் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே இந்தக் கடனை நாட வேண்டும். அத்தியாவசியமற்ற செலவுகளுக்காக தனிநபர் கடன் வாங்குவது தேவையற்ற நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

சுயதொழில் செய்பவர்கள் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தால், அவர்கள் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்து, தங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியும்.

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: