Personal Loans interest rates compared SBI, PNB, HDFC
வங்கிகளில் இருந்து பெறப்படும் தனி நபர் கடன் தான் நிதி நெருக்கடி சமயங்களில் கை கொடுக்கும். இதை பெறுவது எளிது மற்றும் குறைவான எண்ணிக்கையிலான ஆவணங்களே இதற்கு தேவைப்படும். எனினும் வீட்டு கடன், வாகன கடன், நகை கடன் போன்றவற்றோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தனி நபர் கடனுக்கு வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கும் ஏனென்றால் இது பாதுகாப்பற்ற கடன் (unsecured loan). அப்படியென்றால் இந்த கடனை வாங்க நீங்கள் எந்த சொத்தையும் அடமானமாக கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
Advertisment
தனி நபர் கடனை பொருத்தவரை, கடன் தொகை மற்றும் வட்டி விகிதம் என்பது உங்களுடைய சம்பளம், credit score, திரும்ப செலுத்தும் திறன் மற்றும் பிற காரணிகளை பொருத்தது. எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை தனி நபர் கடன்களுக்கு வாங்கும் வட்டி விகிதங்கள் பற்றிய ஒரு ஒப்பீடு
பாரத ஸ்டேட் வங்கி தனிநபர் கடன் (SBI Personal Loan)
Advertisment
Advertisements
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தனி நபர் கடன்களுக்கு 10.45 சதவிகிதம் முதல் 16.55 சதவிகிதம் வரை வட்டி விகிதம் வசூலிக்கிறது. மேலும் வங்கி ஒரு சதவிகிதம் வரை செயலாக்க கட்டணமாக (processing fee) வசூலிக்கிறது.
பஞ்சாப் தேசிய வங்கி (Punjab National Bank)
இந்த வங்கி தனி நபர் கடன்களுக்கு 9.95 சதவிகிதம் முதல் 14.50 சதவிகிதம் வரை வட்டி விதிக்கின்றது. குறைந்த பட்ச கடன் தொகை ரூபாய் 50,000/- ஆகவும் அதிகபட்ச கடன் தொகை என்பது அனைத்து பிடித்தங்கள் போக உங்களது சம்பளத்தின் (monthly net take-home salary (net salary minus all existing EMIs) 20 மடங்கு தொகையாகவும் இருக்க வேண்டும். இந்த வங்கியும் செயலாக்க கட்டணமாக 1.80 சதவிகித தொகையை தனி நபர் கடன்களுக்கு வசூலிக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி (HDFC bank)
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குபவரான (சந்தை மிதிப்பின் படி) ஹெச்டிஎப்சி வங்கி தனி நபர் கடன்களுக்கு 10.75 சதவிகிதம் முதல் 21.30 சதவிகிதம் வரை வட்டி விதிக்கிறது. மேலும் 2.50 சதவிகிதத்தை செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”