scorecardresearch

சில மணி நேரங்களில் கிடைக்கும் பர்சனல் லோன்… வீடு ரெனவேஷன், கல்யாண செலவு கவலைய விடுங்க

மிகவும் எளிமையான அதே சமயத்தில் உடனே கிடைத்துவிடக் கூடிய லோனும் இது தான். விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் குடைச்சல் வேலைகளும் மிகக் குறைவு.

சில மணி நேரங்களில் கிடைக்கும் பர்சனல் லோன்… வீடு ரெனவேஷன், கல்யாண செலவு கவலைய விடுங்க

Personal loans starting at 8.9 per cent interest : வீட்டில் ஒரு அவசர தேவை வருகிறது! அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் கை கொடுப்பது தான் பர்சனல் லோன். இந்த லோன்களை பெற நீங்கள் எந்த செக்யூரிட்டி அல்லது சொத்துகளை வங்கியில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் எளிமையான அதே சமயத்தில் உடனே கிடைத்துவிடக் கூடிய லோனும் இது தான். விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் குடைச்சல் வேலைகளும் மிகக் குறைவு. உங்களின் சம்பளம் என்ன என்று பார்ப்பார்கள். அவ்வளவு தான். திருமணம், வீட்டிற்கு அவசர தேவை, கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்கு உடனே இந்த லோனை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

மற்ற கடன்களை பெற நீங்கள் நாள் கணக்கில் அலைய வேண்டிய நிலை இருக்கும். ஆனால் சில மணி நேரங்களில் உங்களுக்கு கடனை உறுதி செய்கிறது பர்சனல் லோன் திட்டங்கள். சில வங்கிகள் மட்டும் ஒரு வாரம் எடுத்துக் கொள்ளும். நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றே ஒன்று உங்களின் கிரெட் ஸ்கோர்களை சரியாக வைத்திருப்பது தான். சம்பளம், கிரெடிட் ஸ்கோர் போன்றவை மிக முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது.

”ஒரு இடத்துல லோன் வாங்கணும்னா பத்து வங்கிகள்ல கிடைக்குற லோன் சலுகைகள் பத்தி தெரிஞ்சுக்கங்க… என்னடா நகைக்கட வெளம்பரம் மாதிரி இருக்குனு யோசிக்காதீங்க” நிதி மேலாண்மை வல்லுநர்கள் கூறுவது இதைத் தான். மற்ற கடன்களோடு ஒப்பிடுகையில் பர்சனல் கடனுக்கான வட்டி சற்று அதிகம் தான் எனவே ஒப்பிடு செய்வது மிகவும் நல்லது. முன்பு போல் வங்கி வங்கியாக ஏறி இறங்க வேண்டிய தேவையில்லை. அனைத்து தகவல்களும் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தில் கிடைக்கிறது.

Personal loans starting at 8.9 per cent interest

வட்டியோடு மட்டுமின்றி ப்ரோசசிங் கட்டணம், இதர வசதிகள், ஏதேனும் மறைமுக கட்டணங்கள் செலுத்த வேண்டுமா என்பதை தெரிந்தவர்களிடம் விசாரித்துக் கொள்வதும் நல்லது. நீங்கள் சம்பளம் பெறும் நபர்களாக இருக்கும் பட்சத்தில் 3 மாத சம்பள ஆவணம், ஃபார்ம் 16 மற்றும் கடந்த ஆண்டுக்கான இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன்ஸ் ஆகியவற்றையும் நீங்கள் சமர்பிக்க வேண்டும். சுய தொழில் முனையும் நபர்களாக இருந்தால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான ஐ.டி. ரிட்டர்ன்ஸ் தகவல்களையும் ஆடிட் செய்யபட்ட நிதி தொடர்பான தகவல்களையும் தர வேண்டும். அதே போன்று உங்களின் நிறுவனம் செயல்பாட்டிற்கு வந்து குறைந்தது இரண்டு வருடங்களாவது முழுமை பெற்றிருக்க வேண்டும்.

நீங்கள் மருத்துவர்கள், சி.ஏ. மற்றும் இன்னபிற ப்ரொஃபஷ்னல்களாக இருந்தால் உங்களின் உரிமத்தை பர்சனல் லோன் வாங்கும் போது காட்ட வேண்டும். ஒரு நல்ல அட்வைஸ் என்னனா, அதிகப்படியான கடன் தேவை இருந்தா நிச்சயமா நீங்க பர்சனல் லோன் வாங்க வேண்டாம். ஏன் என்றால் சமயங்களில் திருப்பி செலுத்த தாமதம் ஆகிவிடும். அது உங்களின் க்ரெடிட் ஸ்கோருக்கு தீங்காக முடிந்துவிடும். 25 கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பர்சனல் லோனுக்கு தரும் வட்டி என்ன என்பதை நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Personal loans starting at 8 9 per cent interest check out the latest offers by 25 leading banks