சமையல் எரிவாயு இணைப்பு வைத்திருக்கும் நபர்கள் இரண்டு வாரங்களில் தங்களது கியாஸ் ஏஜென்சிக்கு சென்று கே.ஒய்.சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொள்ள மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த கே.ஒய்.சி. குறித்த தகவல்களை மே 30ஆம் தேதிக்குள் பதிவு செய்துவிட வேண்டும். எனினும், இந்தத் தகவல்கள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கியாஸ் இணைப்பு பெற்ற நபர்களுக்கு ரூ.372 மானியமாக வழங்கப்படும். அதேபோல், மற்றவர்களுக்கு ரூ.47 மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இருப்பவர்களுக்கு ரூ.500 க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. மே 2016 இல், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (எம்ஓபிஎன்ஜி), 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' (பிஎம்யுஒய்) திட்டத்தை ஒரு முதன்மைத் திட்டமாக அறிமுகப்படுத்தியது.
இது எல்பிஜி போன்ற சுத்தமான சமையல் எரிபொருளை கிராமப்புற மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“