பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு? லேட்டஸ்ட் நிலவரம் என்ன?
Petrol shortage today Tamil News: கடந்த 26 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலை மாற்றமின்றி இருப்பதால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
Petrol, diesel shortage news in tamil: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் 26-வது நாளாக எந்த மாற்றமும் இல்லாமல் பெட்ரோல்,டீசல் விலை தொடர்கிறது. அதன்படி இன்று (16-ம் தேதி), சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Advertisment
இந்த நிலையில், கடந்த 26 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலை மாற்றமின்றி இருப்பதால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. அத்துடன், எண்ணெய் நிறுவனங்கள் தங்களுடைய டீலர்களுக்கு போதிய அளவு பெட்ரோல் மற்றும் டீசல் அனுப்பாததால் தமிழகத்தின் பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதனால், வாகன் ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில் நமது செய்தியாளர் ஒருவர் அவருடைய வாகனத்திற்கு டீசல் நிரப்ப, மதுரை - ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபல பங்கிற்கு சென்று இருந்தார். அப்போது அந்த பிரபல பங்கின் ஊழியர், "எங்களுக்கு வாரத்திற்கு 10,000 ஆயிரம் லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே இங்கு உங்களுக்கு 500 ரூபாய்க்கு மட்டுமே டீசல் நிரப்படும்" என்று தெரிவித்திருக்கிறார். இதேபோல் அருமையில் இருந்த சில பிரபல எண்ணெய் நிறுவங்களின் பங்குகளிலும் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.