ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. உங்கள் பிஎஃப் கணக்கு ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் EPFO இன் பிற சேவைகளைப் பயன்படுத்த முடியாது.
சமூக பாதுகாப்பு கோட் 2020 இன் பிரிவு 142 இன் கீழ் EPFO இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னர் உங்கள் ஆதார் கார்டை வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும். ஆன்லைனில் எப்படி இணைப்பது என பார்க்கலாம்.
முதலில் நீங்கள் EPFO வலைத்தளமான www.epfindia.gov.in இல் உள்நுழைய வேண்டும்.
பிறகு, ஆன்லைன் சேவைகளுக்குச் செல்வதன் மூலம், e-KYC Portal கிளிக் செய்து, பின்னர் link UAN aadhar கிளிக் செய்யவும்.
உங்கள் UAN எண் மற்றும் UAN கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
உங்கள் மொபைல் எண்ணில் OTP எண் வரும்.
உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை ஆதார் பெட்டியில் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்
பின்னர் OTP verification ஐ கிளிக் செய்யவும்
ஆதார் விவரங்களை மீண்டும் சரிபார்க்க, ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் இல் OTP உருவாக்கப்பட வேண்டும்.
verification பிறகு, உங்கள் ஆதார் உங்கள் PF கணக்கில் இணைக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil