எந்த ஒரு நிறுவனத்திலும் வேலை செய்யும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பிடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வருங்காலத்திற்கு மற்றும் அவசர தேவைக்கு இது மிகவும் உதவக்கூடியது.
ஆனால் பிஎஃப் பணத்தை நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சரியாக உங்கள் கண்க்கில் சேர்கிறதா? என்பது குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அத்தோடு மாதம் மாதம் உங்கள் வங்கி கணக்கில் போடப்படும் பிஎஃப் தொகை எவ்வளவு? என முழு தகவல்களையும் நீங்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், செல்போன் எண்ணைப்
பதிவு செய்து வைத்தால், பிஎஃப் குறுஞ்செய்தி வரும். //www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
உங்களின் பீஎப் கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ கீழ்கண்டவாறு அனுப்ப வேண்டும்.EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பவும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பிஎஃப் விவரங்களைப் எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதியும் உள்ளது.
இச்சேவைப் பெற வேண்டும் என்றால் ஆதார், பான் எண் அல்லது வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை உங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டு அது அனுமதி வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவல்களைப் பெற முடியும்.