அடிக்கிற வெயில பிஎப் அலுவலகத்திற்கு சென்று வரிசையில் நிற்க தேவையில்லை! ஆதாரை இணைக்க இதை செய்தாலே போதும்.

பி.எஃப் பணம் உடனடியாக கைக்கு வந்துவிடும்.

pf online apply : இபிஎப்ஒ ஆணையம் பிஎப் எண்ணுடன் ஆதாரை இணைப் பதற்கு கடந்த வருடம் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது அதுமட்டுமல்லாமல் 50 லட்சம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய் வூதிய கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து டிஜிட்டல் லைப் சான்றிதழை ஒப்படைப்பதற்கான கால அவகாசமும் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்று பல முறை ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. லைப் சான்றிதழை டிஜிட்டலில் சமர்பிக்க முடியாத ஓய்வூதிய தாரர்கள் வங்கிகளின் சென்று சமர்பிக்கலாம் என சமீபத்தில் இபிஎப்ஒ ஆணையம் உத்தர விட்டது. மேலும் டிஜிட்டலில் ஏன் சமர்பிக்கமுடியவில்லை என்பதற்கு காரணத்தை கூற வேண்டும் என்று கூறியிருந்தது.

இதுவரை இதற்கான கொடுக்கப்பட்ட அனைத்து கால அவகாசங்கள் முடிந்து விட்டன. மாத சம்பளக்காரர்கள் தங்களது பிஎஃப் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்களது பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம் ஆகும். ஒருவேளை இதுவரை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பி.எஃப் வலைதளத்தில் பணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எடுக்க முடியும். விண்ணப்பித்ததும் உங்களுடைய விவரங்கள் சரிபார்க்கப்படும். பிறகே, சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கணக்குக்கு பி.எஃப் பணம் நேரடியாக அனுப்பப்படும். இப்போது ஆன்லைன் மூலம் க்ளெய்ம் செய்வதன் மூலம், இதுவரை 20 நாள்களாக இருந்த எண்ணிக்கை குறைந்து பி.எஃப் பணம் உடனடியாக கைக்கு வந்துவிடும்.

தெரியாதவர்களுக்கும் முடிந்த வரை பகிருங்கள். பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க பிஎஃப் அலுவலகத்திற்கு நேரில் சென்று கால் கடக்க வரிசையில் நிற்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.அதுவும் வெளியில் அடிக்கிற வெயிலுக்கு நீங்கள் அலைய வேண்டிய அவசியமே வேணாம்.

வீட்டில் இருந்தப்படி அதுவும் ஆன்லைன் மூலமாகவே பிஎஃப் கணக்கு ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்ற தகவலை இங்கே நாங்கள் பகிர்ந்து உள்ளோம்.

வாடிக்கையாளர்கள் தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை, அவர்களது PF- கணக்குடன் இணைக்க, ஆன்லைன் வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது UAN எண்ணினை கொண்டு இந்த வசதியினை பயன்படுத்திக் கொள்ள இயலும்!

எவ்வாறு இணைப்பது?

– LinkUanAadhaar என்ற பாதையினை பயன்படுத்தி EPFO வலைதளத்தில் உள்நுழைய வேண்டும்.

– தங்களது UAN எண்ணினை உள்ளிடவும்

– தங்களது PF கணக்குடன் இணைப்பில் இருக்கும் கைபேசி எண்ணினை உள்ளிடவும்.

– பின்னர் தங்கள் கைபேசிக்கு OTP ஒன்று அனுப்பி வைக்கப்படும், அதனை வலைப்பக்கத்தினில் உள்ளிட்டவுடன் தங்களுடைய ஆதார் எண்ணினை உள்ளிடும் வசதியின் மூலம் தங்களுடைய ஆதார் எண்ணினை இணைத்துக் கொள்ளலாம்!

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close