Advertisment

ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு பி.எஃப். கணக்கில் இப்படி ஒரு மாற்றமா?

அனைத்து பி.எஃப். கணக்குகளும் வரி விதிக்கப்பட்ட கணக்குகள், வரி விதிக்கப்படாத கணக்குகள் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
பி.எஃப் அக்கவுண்ட் இருந்தா சந்தோஷப் படுங்க... கூடுதல் வட்டி வழங்க ரெடியாகும் EPFO!

PF Accounts To Be Split Into Two From April 1 : வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் பி.எஃப். கணக்கானது இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரூ. 2.5 லட்சத்திற்கு மேல் வருடத்திற்கு பி.எஃப். கணக்கில் வரவு வைக்கும் ஊழியர்களின் பி.எஃப். தொகைக்கு வரி கட்ட வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்த நிலையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Advertisment

மிக அதிகமாக சம்பாதிக்கும் மக்கள் அரசின் நலத்திட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் இதில் என்ன?

அனைத்து பி.எஃப். கணக்குகளும் வரி விதிக்கப்பட்ட கணக்குகள், வரி விதிக்கப்படாத கணக்குகள் என்று இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும்.

வரி விதிக்கப்படாத கணக்குகள் மார்ச் 31, 2021 இல் இருந்தபடி அவற்றின் இறுதிக் கணக்கையும் உள்ளடக்கும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கூறியுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் படி வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் இது செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணியாளர்களின் ரூ. 2.5 லட்சத்திற்கு மேலான பங்களிப்பு இருக்கும் பட்சத்தில் செலுத்தப்பட வேண்டிய வரிக்காக ஐ.டி. விதிகளில் புதிதாக 9டி இணைக்கப்பட்டுள்ளது.

முடிவடைய இருக்கும் நிதி ஆண்டு மற்றும் ஏற்கனவே முடிந்த கடைசி நிதி ஆண்டில் வரி செலுத்தக் கூடிய வட்டியை கணக்கிட இரண்டு கணக்குகள் ஏற்கனவே இருக்கும் பி.எஃப், கணக்கில் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment