நீங்கள் மாத சம்பளத்தாரராக இருந்தால், உங்கள் சம்பாத்தியத்தில் குறிப்பிட தொகை பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும். இந்த தொகைகக்கு அதிக வட்டி கிடைப்பதால், ஓய்வு காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வட்டி தொகை உங்கள் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
சில அவசர சூழ்நிலையில், கையில் பணம் இல்லாத போது, நமக்கு திந்ந்திருக்கும் ஒரே கதவாக பிஎஃப் தொகை இருக்கும். அத்தகைய நேரத்தில், பணத்தை எடுக்க, நீங்கள் எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை, நீங்கள் ஒருவரின் உதவியை நாட வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இருந்தால் போதும்,உங்கள் மொபைலில் இருந்து செய்து முடித்திடலாம்.
பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை உமாங் செயலி மூலமாக 5 ஸ்டெப்ஸ் வழியாக எடுக்கும் செயல்முறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.
உமாங் செயலியில் பிஎஃப் பணம் எடுக்கும் வழிமுறை
- முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் UMANG செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அடுத்து, அச்செயலியை ஒப்பன் செய்து ‘EPFO’ என்ற வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதில், ‘Employee Centric’ என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்து,‘Raise Claim’ ஆப்ஷனை கிளிக் செய்து, UAN எண்ணை பதிவிட வேண்டும்.
- தொடர்ந்து, மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை திரையில் பதிவிட்டு, withdrawal Type-யை தேர்ந்தெடுத்து, நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.
- பின்னர், செல்போனுக்கு வரும் claim reference number மூலம் பிஎஃப் பணம் எடுக்கும் பிராசஸ் எந்த கட்டத்தில் உள்ள என்பதை தெரிந்துகொள்ளலாம்.
எவ்வாறாயினும், பிஎஃப் பணத்தை உமாங் செயலி மூலம் எடுத்திட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கும் கட்டாயம் பின்பற்றிருக்க வேண்டும்.
- உங்கள் UAN நம்பர் ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பர் ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும்.
- உமாங் செயலியும் ஆதாருடன் இணைத்திருப்பது அவசியமாகும்.
ஏனென்றால், உமாங் செயலி வருமான வரி தாக்கல், எரிவாயு சிலிண்டர் முன்பதிவு, பாஸ்போர்ட் சேவை, பிஎம் அவாஸ் யோஜனா, பான் கார்டு போன்ற பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil