PF apply online pf amount apply online : தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து PF பிடிப்பது பொதுவான நடைமுறை என்பது யாவரும் அறிந்ததே. இது தொழிலாளர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் அவசர தேவைக்கு அவர்களின் கணக்கில் வைப்பில் இடப்படும்.
ஆனால் உங்களுக்கான PF பணம், முறையாக கணக்கில் சேர்க்கப்படுகின்றதா என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் யாரிடமும் அலைய வேண்டியதில்லை.
மேலும் இ-பாஸ்புக், PF பேலன்ஸ் செக் செய்து கொள்வது, PF ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்து சேவைகளுக்கும் இன்று ஆன்லைன் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதில் உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் PF தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். //www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
கூடவே, மத்திய அரசு e-inspection system என்ற புதிய நடைமுறையை அறிமும் செய்துள்ளது. இதன் மூலம பிஎஃப் எடுக்கவும் மற்றும் அதிகாரிகளை தொடர்புக் கொள்ளலாம்.
உங்களின் PF கணக்கில் பதிவு செய்து வைத்துள்ள மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ்-ஐ EPFOHO UAN என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் PF குறித்த தகவல்களை எஸ்எம்எஸ் மூலம் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
தொழில் தொடங்க கடன் வேண்டுமா? செய்ய வேண்டியது என்ன? முழு விபரம்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil