PF balance check online : தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மூலமாக பி.எப். பங்கினை சம்பளத்தின் மூலம் செலுத்தி வருகின்றனர். தொழிலாளர்கள் சார்பில் ஒரு பங்கும், நிறுவனம் சார்பில் ஒரு பங்கும் பிஎப் கணக்கில் சேர்ந்து வருகிறது. தொழிலாளர், அந்த வேலையை விடும்போது, அந்த பி.எப். பணம், அவர்களுக்கு உற்றநேரத்தில் கைகொடுக்கிறது.
பி,எப். பணத்தை எவ்வாறு எடுப்பது என்பது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அதேபோல், நமது சம்பளத்தில் இருந்து எத்தனை சதவீதம், பி.எப் கணக்கிற்கு சென்று சேருகிறது என்ற விஷயமும் தெரிவதில்லை. இதுபோன்ற விஷயங்களை நாம் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
நாம் நமது UAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கும் பட்சத்தில், பி.எப். பணத்தை கிளெய்ம் செய்வது மிக எளிதாகிறது
PF balance check online : பிஎஃப் பேலன்ஸ் செக்கிங்!
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்க்கும் இந்த பிஎஃப் பணம் சரியாக உங்கள் கணக்கில் வருகிறதா? என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் பணிப்புரியும் நிறுவனத்தின் அனுமதி எல்லாம் அவசியமே இல்லை. ஈஸியாக ஆன்லைனில் பார்க்க முடியும். எப்படி என்று இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
1. இணையதளம் மூலமாக பார்க்க யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணை ஆக்டிவேட் (Activate) செய்ய வேண்டும். யு.ஏ.என். ஆக்டிவேட் ஆக குறைந்தது 6 மணி நேரம் ஆகும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் பி.எப். கணக்கைப் பார்க்கும் வசதி கிடைக்கும்.
பின், https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login.jsp என்ற பக்கத்திற்குச் செல்லவும். அதில், யு.ஏ.என். மற்றும் பாஸ்வேர்ட் மற்றும் பாதுகாப்பு குறியீட்டுச் சொல் (Captcha) ஆகியவற்றை உரிய இடத்தில் டைப் செய்து Log In பட்டனை கிளிக் செய்யலாம்.
இப்போது பி.எப். கணக்கு திறந்து விடும். அதில் இடது கை பக்கத்தில் இருக்கும் ‘Select MEMBER ID to View PassBook’ என்பதை கிளிக் செய்தால் பி.எப். கணக்கின் பாஸ்புக்கை தோன்றும். அதை கிளிக் செய்தால் பி.எப். கணக்கில் இதுவரை எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என அறிந்துகொள்ளலாம். (சிலருக்கு இந்த இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்புக் இருக்கலாம். அதில் ஏதாவது ஒன்றில் மொத்த தொகை காட்டப்படும். பெரும்பாலும் அது சமீபத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பாஸ்புக்காக இருக்கும்.)
மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு இது கண்டிப்பாக நல்ல செய்தி தான்! பிஎஃப் வட்டி உயர்ந்தது
2. மிஸ்டு கால் மூலம் தெரிந்துக்கொள்ள யு.ஏ.என். ஆக்டிவேட் செய்திருக்க வேண்டியது முதல் தேவை. மேலும் யு.ஏ.என். உடன் வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், பான் கார்டு எண் ஆகியவையும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பின், எஸ்.எம்.எஸ். முறையில் செய்தது போலவே, பதிவு செய்யப்பட்ட எண் மூலம் +911122901406 என்ற எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுக்க வேண்டும்.
அந்த கால் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பின் பி.எப். இருப்புத்துறை விவரம் எஸ்.எம்.எஸ் மூலமாக கிடைக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.